The cricket
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்படி இத்தொடரின் முடிவில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதுடன், வெஸ்ட் இண்டீஸ் அணியையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இதனையடுத்து அந்த அணி இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஸாக் கிரௌலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on The cricket
-
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிகாக அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் எம் எஸ் தோனியை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 5ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
தனக்கு பிடித்த பேட்டர், பந்துவீச்சாளர் குறித்து மனம் திறந்த சிக்கந்தர் ரஸா!
ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா, தனக்கு பிடித்த பேட்டர் ரோஹித் சர்மா என்றும், பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என்றும் கூறியுள்ளார். ...
-
SL vs IND, 2nd ODI: முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய சிராஜ்; வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தொடக்க வீரர் பதும் நிஷங்கா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
விண்டிஸை வெல்ல முடியும் என்பது எங்களுக்குத் தெரியும் - காகிசோ ரபாடா!
வெஸ்ட் இண்டீஸ் எப்போது நான் சுற்றுப்பயணம் செய்ய மிகவும் பிடித்த இடம். நான் அங்கு விளையாடுவதை எப்போது விரும்புகிறேன் என தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தெரிவித்துள்ளார். ...
-
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் இஷான் கிஷன்; இந்திய அணிக்கு திரும்ப மீண்டும் ஒரு வாய்ப்பு!
எதிர்வரவுள்ள துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு; தொடரிலிருந்து விலகிய ஹசரங்கா!
காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான எஞ்சியுள்ள ஒருநாள் போட்டிகளில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா விலகியுள்ளார். ...
-
ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஒரு சிலரில் பும்ராவும் ஒருவர்- ரவி சாஸ்திரி புகழாரம்!
நடந்த முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவராக இருந்தார் என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். ...
-
தி ஹண்ட்ரட் 2024: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் ஜோஸ் பட்லர்!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக விளையாடி வந்த இங்கிலாந்து அணி வீரர் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
லைகா கோவை கிங்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ், டிஎன்பிஎல் இறுதிப்போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எட்டாவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
SL vs IND, 2nd ODI: நாளைய போட்டியில் கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 6 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார். ...
-
SL vs IND, 2nd ODI: பிளேயிங் லெவனை மாற்றுமா இந்தியா?
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் பிளேயிங் லெவனிலும் ஒருசில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. ...
-
காயத்தில் இருந்து மீண்ட முகமது ஷமி; உள்ளூர் போட்டிகளில் கம்பேக்!
தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள இந்தியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பெங்கால் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். ...
-
ஃபீல்டிங்கில் அசத்தலான கேட்ச்சைப் பிடித்து அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் காணொளி!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 7 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில், புதிய மைல் கல் ஒன்றை எட்டவுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24