West indies cricket
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதையடுத்து இத்தொடரை முடித்த கையோடு வெஸ்ட் இண்டீஸ் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கிரேய்க் பிராத்வைட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், அலிக் அதானாஸ், ஜோஷுவா டா சில்வா, குடகேஷ் மோட்டி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் தொடரிலேயே அசத்திய ஷமார் ஜோசப்பிற்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Related Cricket News on West indies cricket
-
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஜேசன் ஹோல்டர்; மாற்று வீரரை அறிவித்தது விண்டீஸ்!
வரவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை நடத்தும் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த தீவிரவாத அமைப்பு!
நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் நாடுகளுக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்பு ஒன்று தீவிரவாத தாக்குதலுக்கான மிரட்டலை விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
சிபிஎல் தொடரில் புதிய அணியாக உருவான ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸின் டி20 லீக் தொடரான சிபிஎல் தொடரில் ஜமைக்கா தலாவாஸுக்கு பதிலாக ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் என்ற புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. ...
-
ஐஎல்டி20 தொடரிலிருந்து விலகினார் ஷமார் ஜோசப்!
காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐஎல்டி20 லீக் தொடரிலிருந்து விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் அறிவித்துள்ளார். ...
-
ஒரே நாளில் ஓய்வை அறிவித்த நான்கு வீராங்கனைகள்; விண்டீஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியைச் சேர்ந்த அனிஷா முகமது, ஷகேரா செல்மான், கிசியா நைட் மற்றும் கிஷோனா நைட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளனர். ...
-
வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டை வளர்ப்பது கடினம் - கிரேய்க் பிராத்வைட்!
எங்களுக்கு அதிக டெஸ்ட் போட்டிகள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தால் அது டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவதற்கான ஊக்கத்தை கொடுக்கும் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரெய்க் பிராத்வைட் தெரிவித்துள்ளார். ...
-
AUS vs WI: ஒருநாள், டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக பயிற்சி செய்து வருகிறேன் - ஆண்ட்ரே ரஸல்!
அடுத்த வருடம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக உடலளவில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார். ...
-
WI vs ENG, 5th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-2 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
AUS vs WI: டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டிஸ் அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs ENG: கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் 15 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பையை டார்கெட் செய்யும் விண்டீஸ்; மீண்டும் அணிக்கு திரும்பிய ரஸல்!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் ஆண்ட்ரே ரஸல், நிக்கோலஸ் பூரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டிஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்பும், துணைக்கேப்டனாக அல்ஸாரி ஜோசப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47