Wi vs aus
நான் விளையாடிய மிகவும் திருப்திகரமான ஒருநாள் போட்டி - ஆடம் ஸாம்பா!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் அஹ்மதாபாத் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஆடம் ஸாம்பா பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலுமே சிறப்பாக செயல்பட்டார்.
அவர் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். சிறப்பாக பந்துவீசிய அவர் 10 ஓவர்களில் வெறும் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஃபீல்டிங்கின்போது இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லேயின் கேட்ச்சினைப் பிடித்து அசத்தினார். இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியே ஆஸ்திரேலியாவுக்காக நான் விளையாடிய மிகவும் திருப்திகரமான ஒருநாள் போட்டி என ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Wi vs aus
-
பூஜ்ஜியமா அல்லது இரண்டு புள்ளிகளா? - ஆஸ்திரேலியாவை நோக்கி நவீன் உல் ஹக் கேள்வி!
ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை போட்டியில் அவர்கள் எங்களுடன் விளையாடுவார்களா? மாட்டார்களா? என்பதை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
நாங்கள் எங்கள் மக்களை ஏமாற்றி இருக்கிறோம் - ஜோஸ் பட்லர்!
என்னுடைய ஃபார்ம் மிகவும் கவலைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. நான் இங்கு வரும்பொழுது நல்ல நிலைமையில் இருந்தேன். ஆனால் என்னுடைய மோசமான ஃபார்ம் எனது அணிக்கு பெரிய பிரச்சனையை கொடுக்கிறது என ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த ஜானி பேர்ஸ்டோவ்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியாவை 286 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடவுள்ளன. ...
-
உலகக்கோப்பையில் முதல் முறை; விக்கெட் இன்றி இன்னிங்ஸை முடித்த ஸ்டார்க்!
உலகக் கோப்பைகளில் தொடர்ச்சியாக குறைந்தது ஒரு விக்கெட்டை எடுத்த வீரர் என்ற மிட்செல் ஸ்டார்கின் தனித்துவமான உலக சாதனை இப்போட்டியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. ...
-
மிகச் சிறப்பான முறையில் மீண்டு வந்திருக்கிறேன் - டிராவிஸ் ஹெட்!
நான் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பதில் மகிழ்ச்சி. அதே வேளையில் அணிக்கு திரும்பியதோடு எனது பங்களிப்பை வழங்கி அதில் நாங்கள் வெற்றியும் பெற்றதில் எனக்கு கூடுதல் சந்தோஷம் என ஆட்டநாயகன் விருதை வென்ற டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிக்கு அருகில் வந்த தோல்வியைத் தழுவியுள்ளோம் - டாம் லேதம்!
நிச்சயம் வெற்றிக்கு அருகில் வந்து தோற்கும் போது மனது வலிக்கும். ஆனாலும் இது சிறந்த போட்டியாக அமைந்துள்ளது என நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த போட்டியிலும் இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை தொடர்வோம் - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் பீல்டிங்கில் சரியாக செயல்பட்டதாலயே எங்களால் அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்து வெற்றி பெற முடிந்ததாக கருதுகிறேன் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன்செய்த ரச்சின் ரவீந்திரா!
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் இரு சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா சமன் செய்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரவீந்திரா, நீஷம் போராட்டம் வீண்; நியூசியை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வார்னர், ஹெட் மிரட்டல்; நியூசிலாந்துக்கு 389 டர்கெட்!
நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 389 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பந்துவீச்சாளர்களை புரட்டியெடுத்த வார்னர், ஹெட்; ஆஸ்திரேலியா புதிய சாதனை!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி முதல் 10 ஓவர்களில் 118 ரன்களை குவித்து சாதனைப்படைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24