Will rohit sharma
T20 WC 2024: பாபர் ஆசாமின் கேப்டன்சி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி நேற்று கயானாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 57 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியானது அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Will rohit sharma
-
இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் தான் - ஜோஸ் பட்லர்!
இந்த போட்டியில் நாங்கள் 20 முதல் 25 ரன்கள் வரை அவர்களுக்கு கூடுதலாக வழங்கி விட்டோம் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
ஒரு அணியாக இணைந்து கடும் உழைப்பை செலுத்தியுள்ளோம் - ரோஹித் சர்மா!
இந்த தொடர் முழுவதும் நாங்கள் மைதானத்தின் சூழலுக்கு ஏற்ப விளையாடி வருகிறோம் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
T20 WC 2024, Semi Final 2: அக்ஸர், குல்தீப் சுழலில் வீழ்ந்த இங்கிலாந்து; 10-ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டி முன்னேறி இந்தியா சாதனை!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
T20 WC 2024, Semi Final 2: ரோஹித் சர்மா அரைசதம்; இங்கிலாந்து அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024: தோனி, கோலி வரிசையில் இணைந்த ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக 5000 ரன்களை கடந்த 5ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ...
-
இங்கு இல்லை என்றால் வேறு எங்கு ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்? - இன்ஸமாம் குற்றச்சாட்டிற்கு ரோஹித் பதிலடி!
நாங்கள் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் விளையாடவில்லை. இங்கே, உள்ள மைதானங்களில் 12-15 ஓவர்களில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என இன்ஸமாம் உல் ஹக்கின் குற்றச்சாட்டிற்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
-
பாபர் ஆசாமின் கேப்டன்சி சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை பதிவுசெய்த வீரர் எனும் பாகிஸ்தானின் பாபர் ஆசமின் சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார். ...
-
இந்த வெற்றி ஒரு அணியாக எங்களுக்கு நல்ல நம்பிக்கையை அளிக்கிறது - ரோஹித் சர்மா!
எதிரணியைப் பற்றி சிந்திக்காமல் சுதந்திரமாக விளையாடுவோம். அதனால் நங்கள் தற்போது செய்துவருவதையே தொடர்ந்து செய்ய வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
T20 WC 2024, Super 8: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
T20 WC 2024: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை இன்று படைத்துள்ளார். ...
-
T20 WC 2024, Super 8: சதத்தை தவறவிட்ட ரோஹித் சர்மா; ஆஸ்திரேலிய அணிக்கு 206 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்டார்க் பந்துவீச்சில் 4 சிக்ஸர்களை விளாசிய ரோஹித் சர்மா- வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஒரே ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஹர்திக் பாண்டியா தான் எங்கள் அணியின் முக்கிய வீரர் - ரோஹித் சர்மா பாராட்டு!
இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் ஹர்திக் பாண்டியா தான். அவரால் இதனை தொடர்ந்து செய்ய முடியுமானால் அது எங்களுக்கு மிகப்பெரும் பலமாக இருக்கும் என எந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
T20 WC 2024: புதிய வரலாற்று சாதனையை படைத்த ஷாகிப் அல் ஹசன்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47