cricket australia
இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமனம்!
ஆஸ்திரேலிய அணி இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் அணியில் சாதாரண வீரர்களாக மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.
அதேசமயம் அறிமுக வீரர்கள் நிதீஷ் ரெட்டி, துருவ் ஜூரெல் ஆகியோருக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகியுள்ளனர். அதேசமயம் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
Related Cricket News on cricket australia
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
ஆஸ்திரேலியா - இந்தியா தொடர்; அதிகரிக்கும் ரசிகர்களின் ஆர்வம் - நான்கு மாதங்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள் !
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடைபெறும் ஒருநாள் போட்டி மற்றும் கான்பெராவில் நடைபெறும் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் நான்கு மாதங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடுவது வீரர்களின் முடிவே - கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது குறித்து வீரர்கள் தனிப்பட்ட முடிவுகளை எடுக்கலாம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பிளே ஆஃப் போட்டிகளை தவறவிடும் ஜோஷ் ஹேசில்வுட்!
ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கம்பேக் போட்டியில் சதமடித்து அசத்திய கேமரூன் க்ரீன்!
காயம் காரணமாக கடந்த சில மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் கேமரூன் க்ரீன் கம்பேக் போட்டியில் சதமடித்து மிரட்டியுள்ளார். ...
-
இளம் வயதில் ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலியாவின் வில் புக்கோவ்ஸ்கி!
தொடர் காயங்கள் காரணமாக அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் வில் புக்கோவ்ஸ்கி அறிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய ஒப்பந்த பட்டியலில் கொன்ஸ்டாஸ், வெப்ஸ்டருக்கு இடம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இளம் வீரர்கள் சாம் கொன்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டர், மேத்யூ குஹ்னமேனுக்கு இடம் கிடைத்துள்ளது. ...
-
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2025-26ஆம் ஆண்டிற்கான போட்டி அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. ...
-
இத்தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டுள்ளனர் - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் எங்கள் பேட்டர்களை தொடர்ந்து அழுத்ததில் வைத்ததுடன் சிறப்பாக விளையாடினார்கள் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
நான் அடித்த சதங்களில் இது தான் எனக்கு முதலிடம் - சரித் அசலங்கா!
நாங்கள் பேட்டிங்கில் இன்னும் அதிக ரன்கள் எடுத்திருக்க வேண்டும், ஆனால் இந்த பிச்ட் இவ்வாறு செயல்படும் என்பதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய தொடருக்கான இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
SL vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஸ்பென்ஸர் ஜான்சன் சேர்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் பென் துவார்ஷுயிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
AUS vs ENG: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் சாம் கொன்ஸ்டாஸ் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் - ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற ஹெட், சதர்லேண்ட்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை டிராவிஸ் ஹெட்டும், சிறந்த வீராங்கனைக்கான விருதை அனபெல் சதர்லேண்டும் கைப்பற்றியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47