rishabh pant
ரிஷப் பந்த் குறித்து தகவல் வெளியிட்ட பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இன்று காலை உத்தராகண்ட் மாநிலத்தில் காரில் பயணித்தபோது விபத்தில் சிக்கினார். டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்புயில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக அவரை காரில் இருந்து மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளது. அதில் “பந்த், சக்ஷாம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளது” என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Related Cricket News on rishabh pant
-
ரிஷப் பந்த் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் தான் - காவல்துறை!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் கார் விபத்து குறித்து ரூர்கீ காவல்துறையினர் முதற்கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் எனக்கூறியிருப்பதால் ரசிகர்கள் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளனர். ...
-
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்; மருத்துவமனையில் அனுமதி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் சாலை விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
IND vs SL: ரிஷப் பந்தை விட இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர் - ஹர்ஷா போக்லே!
இந்திய டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பந்த் வெளியேற்றப்பட்டுள்ளது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND, 2nd Test: சதத்தை தவறவிட்ட ரிஷப், ஸ்ரேயாஸ்; இந்தியா 314-ல் ஆல் அவுட்!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. ...
-
BAN vs IND, 2nd Test: பீஸ்ட் மோடில் ரிஷப் பந்த்; முன்னிலை பெற்றது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஒரு ரன் பின் தங்கியுள்ளது. ...
-
ரிஷப் பந்தின் ஆட்டம் மிக முக்கியமானது - சட்டேஷ்வர் புஜாரா!
இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடுவது எதிரில் நிற்கும் பேட்ஸ்மேனின் பிரஷரை குறைப்பதாக இந்திய துணை கேப்டன் புஜாரா தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND, 1st Test: ஏமாற்றிய கோலி, ராகுல்; அதிரடி காட்டும் ரிஷப் பந்த்!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
தேவை ஏற்படும் போதெல்லாம் விக்கெட் கீப்பர் ரோலை செய்துவருகிறேன் - கேஎல் ராகுல்!
இந்திய அணியில் இருந்து ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டது கடைசி நேரத்திலேயே தெரிய வந்ததாகவும், அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப விக்கெட் கீப்பங் செய்ததாகவும் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய ஒருநாள் அணியிலிருந்து ரிஷப் பந்து அதிரடி நீக்கம்; காரணம் இதுதான்!
வங்கதேச ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
நானாக இருந்தாலும் பந்த்-க்கு தான் வாய்ப்பு தந்திருப்பேன் - சபா கரீம்!
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர் ரிஷப் பந்த்-க்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் சூழலில் முன்னாள் வீரர் சாபா கரீம் மட்டும் ஆதரவுக்குரல் நீட்டியுள்ளார். ...
-
என்னுடைய ரெக்கார்ட் அவ்வளவு மோசமாக இல்லை - ரிஷப் பந்த்!
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தம்முடைய ரெக்கார்ட் மோசமாக இல்லை என்று தெரிவித்த ரிஷப் பந்த், தனக்கு 25 வயது மட்டுமே நிரம்பிய தம்மை ஒப்பிடுவது நியாயமற்ற செயல் என்று தெரிவித்தார். ...
-
NZ vs IND, 3rd T20I: ரிஷப் பந்தை கடுமையாக விமர்சித்த முகமது கைஃப்!
தேவையற்ற ஷாட்கள் அடித்து விக்கெட்டை இழப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் ரிஷப் பந்தை முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் விமர்சித்துள்ளார். ...
-
ரிஷப் பந்தை இந்த இடத்தில் களமிறக்க வேண்டும் - ராபின் உத்தப்பா!
ரிஷப் பந்த் இந்திய அணியில் எந்த பேட்டிங் வரிசையில் களம் இறங்க வேண்டும் என்று இந்திய'அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் தூண்டுகோலாக இவர் இருப்பார் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிபோட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்தை களம் இறக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24