virat kohli
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 49 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பதிரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 45 ரன்களில் குசால் மெண்டிஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 79 ரன்கள் எடுத்த நிலையில் பதும் நிஷங்காவும், 20 ரன்கள் எடுத்த நிலையில் குசால் பெரேராவும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவறினர்.
Related Cricket News on virat kohli
-
விராட் கோலி, ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த கேள்வி - கௌதம் கம்பீர் நச் பதில்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முழு உடற்தகுதியுடன் இருந்தால் நிச்சயம் 2027ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரது இடத்தை யாராலும் நிரப்ப இயலாது - கபில் தேவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND: இலங்கை ஒருநாள் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா?
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலி தனது புகழாலும், அதிகாரத்தாலும் முற்றிலுமாக மாறிவிட்டார் - அமித் மிஸ்ரா!
விராட் கோலி தனது புகழாலும், அதிகாரத்தாலும் முற்றிலுமாக மாறிவிட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா கூறியுள்ள கருத்தானது ரசிகர்கள் மத்தியில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
SL vs IND: இலங்கை தொடரில் இருந்து ரோஹித், கோலி & பும்ராவிற்கு ஓய்வு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணிக்கு வழங்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகை; யாருக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும்?
உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் வழங்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகையில், யார் யாருக்கு எவ்வளவு பணம் பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளன. ...
-
ரோஹித் தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வோம் - ஜெய் ஷா!
ரோஹித் சர்மா தலைமையில் அடுத்து வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
இது எனக்கு மிகவும் பெருமையான தருணம் - ரோஹித் சர்மா!
இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்தும், நடப்பு டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்தும் பேசிய காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
வெற்றி கொண்டாட்டத்தை முடித்த கையோடு லண்டன் புறப்பட்ட விராட் கோலி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்ற நிலையில், அதனை முடித்த கையோடு இந்திய வீரர் விராட் கோலி தனி விமானம் லண்டன் புறப்பட்டுச்சென்றுள்ளார். ...
-
இந்திய அணி வீரர்கள் ஒன்றிணைந்து பாடிய ‘வந்தே மாதரம்’ பாடல் - ரசிகர்களை சிலிர்க்க வைத்த காணொளி!
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவின் போது, இந்திய அணி வீரர்கள் ஒன்றிணைந்து வந்தே மாதரம் பாடலை பாடிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான பந்து வீச்சாளர்- விராட் கோலி புகழாரம்!
ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான பந்துவீச்சாளர். அவர் இந்திய அணிக்காக விளையாடுவது எங்களின் அதிர்ஷ்டம் என இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
ரசிகர்கள் முன் நடனமாடிய விராட் கோலி, ரோஹித் சர்மா - வைரலாகும் காணொளி!
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மைதானத்தில் நடனமாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்திய வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
உலகக்கோப்பை வென்ற இந்திய அணி நாடு திரும்புவதில் மீண்டும் மாற்றம்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை காலை டெல்லி வந்தடைவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24