west indies cricket
ENG vs WI: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு; ஹோல்டர், ரஸலுக்கு இடம்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 6ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. அதன்படி அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது ஜூன் 12அம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
Related Cricket News on west indies cricket
-
ஸ்லோ ஓவர் ரேட்: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகிய காம்பெர், யங்; மாற்று வீரர்கள் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணியில் இடம்பிடித்திருந்த கர்டிஸ் கேம்பர் மற்றும் கிரேய்க் யங் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர். ...
-
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஸ்டன் சேஸ் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோஸ்டன் சேஸும், அணியின் துணைக்கேப்டனாக ஜோமல் வாரிக்கனும் நியமிக்கப்பட்டுள்ளனார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து, அயர்லாந்து தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
விண்டீஸ் கிரிக்கெட்டில் வீரர்களுக்கு எதிரான அநீதி தொடர்கிறது - டுவைன் பிராவோ!
டி20 அணிக்கு ரோவ்மன் பாவெலுக்கு பதிலாக ஷாய் ஹோப்பை கேப்டனாக நியமித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை அந்த அணியின் முன்னாள் கேப்டன் டுவைன் பிராவோ கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பிராத்வைட் விலகல்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கிரேய்க் பிராத்வைட் விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் இமாம் உல் ஹக்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவ வீரர் இமாம் உல் ஹக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs WI: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் ஷாஹின்ஸ் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான் ஷாஹின்ஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் ஷாஹீன்ஸுக்கு எதிராக பயிற்சிய ஆட்டத்தில் பங்கேற்கும் விண்டீஸ்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணிக்கு எதிரான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது. ...
-
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகவும் டேரன் சமி நியமனம்!
வெஸ்ட் இண்டீஸின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் ...
-
அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்து சாதனை படைத்த அமீர் ஜாங்கு!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை அமீர் ஜாங்கு படைத்துள்ளார். ...
-
வங்கதேச டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47