About test
இந்தியா vs இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் மீண்டும் பிளெயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார். மேற்கொண்டு இங்கிலாந்து அணி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. அதேசமயம் இந்திய அணியைப் பொறுத்தவரை கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெலும், நான்காம் இடத்தில் ராஜத் பட்டிதாரும் விளையாடுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளதால் அனுபவமில்லாத இந்திய அணி எப்படி இங்கிலாந்தை சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Related Cricket News on About test
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: தீவிர பயிற்சியில் சர்ஃப்ராஸ், ஜுரெல்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இணையத்தில் வைரலாகும் ஜஸ்ப்ரித் பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்; சாதனை படைத்த ஜஸ்ப்ரித் பும்ரா!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார். ...
-
டெஸ்ட் தரவரிசையில் அஸ்வினை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தார் ஜஸ்ப்ரித் பும்ரா!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
SL vs AFG, Only Test: ஆஃப்கானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியாது. ...
-
2nd Test, Day 1: இரட்டை சதத்தை நெருங்கும் ஜெய்ஸ்வால்; வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்தியா vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ...
-
இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடுவது எனது கனவு - ராஜத் பட்டிதார்!
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது எனது மிகப்பெரும் கனவாகும் என இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ராஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் அஸ்வின், ஜடேஜா!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வினும், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜாவும் முதலிடத்தை தக்கவைத்துள்ளனர். ...
-
ராகுலின் இடத்தில் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய கேஎல் ராகுலின் இடத்தில் அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். ...
-
இங்கிலாந்து குழப்பமில்லாத அணி என்பதை நிரூபித்துள்ளனர் - நாசர் ஹுசைன்!
இங்கிலாந்து அணி மீது சந்தேகம் வரும் போதெல்லாம், அவர்களின் பிடிவாத குணமும் இரண்டு மடங்காக உயர்கிறது என அந்த அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் பாராட்டியுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பின்னடைவை சந்தித்த இந்தியா; ஆஸி முதலிடம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ...
-
IND vs ENG, 1st Test: டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் சுருண்ட இந்தியா; இங்கிலாந்து அணி அபார வெற்றி!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24