As indian
ரிஷப் பந்த் குறித்து தகவல் வெளியிட்ட பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இன்று காலை உத்தராகண்ட் மாநிலத்தில் காரில் பயணித்தபோது விபத்தில் சிக்கினார். டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்புயில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக அவரை காரில் இருந்து மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளது. அதில் “பந்த், சக்ஷாம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளது” என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Related Cricket News on As indian
-
ரிஷப் பந்த் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் தான் - காவல்துறை!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் கார் விபத்து குறித்து ரூர்கீ காவல்துறையினர் முதற்கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் எனக்கூறியிருப்பதால் ரசிகர்கள் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளனர். ...
-
இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து கௌதம் கம்பீர் கருத்து!
அடுத்த டி20 உலகக் கோப்பை குறித்தும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அணுக வேண்டிய முறை குறித்தும் கௌதம் கம்பீர் அதிரடியான சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். ...
-
விராட் கோலி டி20 தொடரில் இல்லாதது ஆதிர்ச்சியாக உள்ளது - சபா கரீம்!
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி இலங்கை டி20 தொடரில் இல்லாதது அதிர்ச்சியாக உள்ளது என முன்னாள் வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்; மருத்துவமனையில் அனுமதி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் சாலை விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் அணியில் தொடர்ந்து நீடிக்க இதனை செய்யக்கூடாது - குமார் சங்ககாரா அட்வைஸ்!
இலங்கை அணியுடனான தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ள சஞ்சு சாம்சன், தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்துவிடக்கூடாது என முன்னாள் வீரர் குமார் சங்ககாரா கூறியுள்ளார். ...
-
துணை கேப்டன் பதவியை எதிர்பார்க்கவில்லை - சூர்யகுமார் யாதவ்!
இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதம் மனம்திறந்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: இறுதிப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா vs இந்தியா?
தென் ஆபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது என்பதை பார்ப்போம். ...
-
இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து மனம் திறந்த ஷிகர் தவான்!
தாம் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ஷிகர் தவான் முதல்முறையாக மௌனத்தை கலைத்துள்ளார்.எனினும் அந்தப் பதிவை போட்ட சில மணி நேரத்தில் ஷிகர் தவான் அதனை டெலிட் செய்து விட்டார். ...
-
பும்ரா முழு உடல் தகுதியுடன் உள்ளார்; ஆனாலும் அவருக்கு ஓய்வு தேவை - பிசிசிஐ!
பும்ரா முழு உடல்தகுதியுடன் இருந்தும் அவரை இலங்கை தொடருக்கு எடுக்காதது ஏன் என்பது குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலியின் இடத்திற்கு ஆபத்து வந்துவிட்டது - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட விராட் கோலி நிச்சயம் ஆர்வம் காட்டுவார் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை, தென் ஆப்பிரிக்க தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!
மகளிர் டி20 உலகக்கோப்பை மற்றும் முத்தரப்பு தொடர்களில் பங்கேற்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs SL: ரிஷப் பந்தை விட இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர் - ஹர்ஷா போக்லே!
இந்திய டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பந்த் வெளியேற்றப்பட்டுள்ளது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: இந்திய ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு; சஞ்சு சாம்சனுக்கு இடம், ஷிகர் தவான் நீக்கம்!
இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் தொடரிலிருந்து ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ...
-
இலங்கை கிரிக்கெட் தொடர்; இன்று இந்திய அணி அறிவிக்க வாய்ப்பு!
இலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் இன்று அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24