As indian
ZIM vs IND: ஜிம்பாப்வே புறப்பட்டது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜூலை 06ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on As indian
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விராட், ரோஹித் இருப்பார்கள்- ஜெய் ஷா உறுதி!
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விளையாடுவார்கள் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித், விராட் ஓய்வு முடிவு அதிர்ச்சியளிக்கிறது - முகமது ஷமி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
ஒரு பில்லியன் நனவாகும் கனவில் மூழ்கிக்கொண்டிருக்கிறேன் - ரோஹித் சர்மா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்திய நிலையில், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிவிட்டுள்ள சமூக வலைதள பதிவானது இணைத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த அணியை அறிவித்த ஐசிசி; 6 இந்திய வீரர்களுக்கு இடம்!
ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இத்தொடருக்கான சிறந்த அணியை ஐசிசி தேர்வு செய்துள்ளது. ...
-
மீண்டும் ஆர்சிபி அணிக்காக புதிய அவதாரத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், எதிர்வரவுள்ள ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ரவீந்திர ஜடேஜாவிற்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொட்ரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளார். ...
-
என்னை விமர்சித்தவர்களுக்கான பதிலடியாக இதனை பார்க்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
கடந்த சில மாதங்களாக ஏராளமான விஷயங்கள் என்னைப் பற்றி கூறப்பட்டு வந்தன. என்னை பற்றி எதுவும் தெரியாதவர்கள்கூட அதிகமாக பேசினார்கள். அதற்கான பதிலடியைக் கொடுத்துள்ளேன் என இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்று அறிவித்துள்ளார். ...
-
ரோஹித், விராட் ஓய்வு அறிவிப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் பதிவு!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இந்திய அணியின் முன்னாள் சாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். ...
-
கோப்பையை வென்றதுடன் வரலாற்று சாதனையையும் நிகழ்த்திய இந்திய அணி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் தோல்வியையே சந்திக்காமல் கோப்பையை வென்ற முதல் அணி எனும் வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக்கோப்பை தொடரை வென்றுள்ள இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளர். ...
-
ZIM vs IND: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே சேர்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வீரர் நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக ஷிவம் தூபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24