As kl rahul
Day-Night Test: மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் 180 ரன்களில் சுருண்டது இந்திய அணி!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் இன்று (டிசம்பர் 06) தொடக்கியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழைத்தார்.இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெஸ்வால் எதிர்கொண்ட முதல் பந்திலேயே மிட்செல் ஸ்டார்க்கிடம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்து முயற்சியில் இறங்கினர். இதில், இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலியும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on As kl rahul
-
Day-Night Test: மிட்செல் ஸ்டார்க் அசத்தல்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உறுதியளித்துள்ளார். ...
-
ஒன்றாக இணைந்து கோப்பையை வெல்வோம் - டிசி அணி குறித்து கேஎல் ராகுல்!
நான் ஐபிஎல் கோப்பையை ஒருபோதும் வென்றதில்லை. டெல்லி கேப்பிடல்ஸும் ஒருபோதும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. அதனால் இம்முறை இருவரும் ஒன்றிணைந்து கோப்பையை வெல்லலாம் என்று கேஎல் ராகுல் கூறியதாக டெல்லி உரிமையாளர் பாரத் ஜிண்டல் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் தொடக்க வீரராக விளையாடினால், ராகுல் 3-ம் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் - புஜாரா!
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கினால், கேஎல் ராகுல் 3ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் மூத்த பேட்டர் சட்டேஷ்வர் புஜாரா கூறியுள்ளார். ...
-
ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்!
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சேர்த்து அதிகமுறை 90 ரன்களில் விக்கெட்டை இழந்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு கேன் வில்லியம்சன் முன்னேறியுள்ளார். ...
-
BGT 2024: முதல் டெஸ்டிற்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய ராகுல்; வைரலாகும் காணொளி!
இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பிய காணொளியை பிசிசிஐ தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ...
-
BGT 2024: பயிற்சிக்கு திரும்பிய கேஎல் ராகுல்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
நேற்றைய தினம் காயம் காரணமாக பயிற்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய கேஎல் ராகுல் இன்று மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளத். ...
-
BGT 2024: பயிற்சியின் போது காயமடைந்த ஷுப்மன் கில்; முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் விரல் பகுதியில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: மார்க்கீ பிளேயர் பட்டியலில் ஸ்ரேயஸ், பந்த், ராகுல், அர்ஷ்தீப்!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலத்தின் கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், முகமது ஷமி, முகமது சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர் ரூ.2 கோடியை அடிப்படை தொகையாக கொண்டு தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளனர். ...
-
பயிற்சி ஆட்டத்தில் காயமடைந்த கேஎல் ராகுல்; வைரலாகும் காணொளி!
பார்டர் கவாஸ்கர் கோப்பை 2024: பயிற்சி போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க ஐபிஎல் 2025 எனக்கு உதவும் - கேஎல் ராகுல் நம்பிக்கை!
எதிர்வரும் ஐபிஎல் தொடரானது இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மீண்டும் இடம் பெறுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
AUSA vs INDA: இந்திய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா ஏ!
இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது. ...
-
AUSA vs INDA: மீண்டும் அணியை கரைசெர்த்த ஜூரெல்; ஆஸி ஏ அணிக்கு 168 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47