Cl trophy
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: லாகூரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்கரவாத தாக்குதலையடுத்து அத்தொடர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், இரு அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறது.
Related Cricket News on Cl trophy
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விராட், ரோஹித் இருப்பார்கள்- ஜெய் ஷா உறுதி!
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விளையாடுவார்கள் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதும் இந்திய ஏ அணி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ஏ அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது. ...
-
தன் தலைமையின் கீழ் கைப்பற்றிய உலகக்கோப்பையை பார்வையிட்ட தோனி!
தனது தலைமையில் இந்திய அணி 2011ஆம் ஆண்டு வென்ற ஐசிசி உலகக்கோப்பையை முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பார்வையிட்டுள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: போட்டி அட்டவணை வெளீயீடு; அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
பெர்த்தில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்; வெளியான தகவல்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: விதர்பாவை வீழ்த்தி 42ஆவது முறையாக பட்டத்தை வென்றது மும்பை!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 42ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: அரைசதம் கடந்த கருண், அக்ஷய்; தோல்வியைத் தவிர்க்க போராடும் விதர்பா!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: முஷீர் கான் அபார சதம; விதர்பா அணிக்கு இமாலய இலக்கு!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணி 538 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: ரஹானே, முஷீர் கான் அரைசதம்; வலிமையான முன்னிலையில் மும்பை!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது விதர்பா அணி!
மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் விதர்பா அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ரஞ்சி கோப்பை அரையிறுதி தோல்வி; பயிற்சியாளரை சாடும் தினேஷ் கார்த்தி!
தமிழ்நாடு அணி ரஞ்சி கோப்பை தொடரில் தோல்வியை தழுவியதற்கு அணியின் பயிற்சியாளர் கேப்டனை குறை கூறியதற்கு முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: மும்பையிடம் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தமிழ்நாடு படுதோல்வி!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதிப்போட்டியில் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: சதமடித்து மிரள வைத்த ஷர்துல் தாக்கூர்; வலிமையான முன்னிலையில் மும்பை!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 207 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: ஷாய் கிஷோர் அபார பந்துவீச்சு; தடுமாற்றத்தில் மும்பை!
மும்பை அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47