Cricket
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கம்பேக் கொடுக்கும் சஞ்சு சாம்சன்!
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சஞ்சு சாம்சன். கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் சிறு வயதிலேயே தனது திறமையை ஐபிஎல் தொடர் மூலம் வெளிப்படுத்தியவர். இதனால் கடந்த 2015ஆம் ஆண்டே இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இந்திய அணிக்காக 17 டி20 போட்டிகள், 11 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். தோனி இருந்தவரை எந்த விக்கெட் கீப்பருக்கும் வாய்ப்பு கிடைக்காத சூழலில், தோனி ஓய்வை அறிவித்த பின்னரும் விக்கெட் கீப்பங்/ பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனிடையே கரோனா வைரஸ் பரவலின் போது ஷிகர் தவான் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டிருந்தார். அதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி அசத்தினார். இதனால் சஞ்சு சாம்சனை ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தினால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
Related Cricket News on Cricket
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து புஜாரா, உமேஷ் யாதவ் நீக்கம்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மிகவும் சுமாராகச் செயல்பட்ட புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...
-
எல்பிஎல் 2023: ஏலாத்தில் சுரேஷ் ரெய்னாவை புறக்கணித்ததா இலங்கை கிரிக்கெட் வாரியம்!
லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஒரே பந்திற்கு இரண்டு ரிவியூக்கள்; நடுவருக்கு அதிர்ச்சி கொடுத்த அஸ்வின்!
ரிவ்யூ கேட்டு நாட்-அவுட் என வந்த முடிவுக்கு, மீண்டும் ஒருமுறை ரிவ்யூ கேட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த செயல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்த அஸ்வின்; ரஹானே முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுகிறாரா அர்ஜுன் டெண்டுல்கர்?
இந்திய இளம் ஆல்ரவுண்டர்களுக்கு 20 நாட்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர்களை வைத்துப் பட்டை தீட்ட முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...
-
Ashes 2023: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெடிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி!
திருச்சி அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
நான் அணியில் இருந்து நீக்கப்பட்டதன் காரணம் இதுதான் - அம்பத்தி ராயுடு!
அடுத்த உலக கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தான் எதற்காக அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார் அம்பத்தி ராயுடு . ...
-
இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் இன்ஸ்டா பதிவு!
கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் ரிஷப் பந்த் ஊன்றுகோல் துணையின்றி தான் படியேறி வரும் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2023: சக்ரவர்த்தி, அஸ்வின் பந்துவீச்சில் 120 ரன்களுக்கு சுருண்டது திருச்சி!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
BAN vs AFG, Only Test: நஜ்முல் ஹொசைன் சதம்; வலிமையான முன்னிலையில் வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை பந்தாடியது நெல்லை ராயல் கிங்ஸ்!
மதுரை பாந்த்ரஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WTC 2023-25: வெளியானது இந்திய அணியின் போட்டி அட்டவணை!
2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட தயாராகும் இந்தியாவின் லீக் சுற்று அட்டவணை வெளியாகியுள்ளது. ...
-
சாய் சுதர்ஷனுக்கு ஆட்டநாயக விருது என்று நினைத்தேன் - டெவான் கான்வே!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சாய் சுதர்ஷன்தான் ஆட்டநாயகன் விருது வெல்வார் என்று நான் நினைத்தேன் என்று சிஎஸ்கே வீரர் டெவான் கான்வே தெரிவித்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47