Cricket news
மகளிர் ஐபிஎல்: ரூ.951 கோடிக்கு ஒளிபரப்பும் உரிமையை கைப்பற்றியது வையாகாம்-18 நிறுவனம்!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை முதல் முறையாக பிசிசிஐ அறிமுகம் செய்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இதுவரை ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு முதல் மகளிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளையும் விறுவிறுப்பாக செய்து வந்தது.
இந்த நிலையில், இன்று காலை 2023 - 2027 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் நடந்தது. இதில், மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான உரிமத்தை வையாகாம்-18 நிறுவனம் ரூ.951 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.7.09 கோடி என்று ஒட்டுமொத்தமாக 2023 முதல் 2027 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு ரூ.951 கோடி என்று ஏலம் எடுத்துள்ளது.
Related Cricket News on Cricket news
-
மகளிர் யு19 உலகக்கோப்பை: மீண்டும் அசத்திய ஸ்வேதா, ஷஃபாலி ; இந்தியா அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான் யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
நான் விருதுகளுக்காகவும் சாதனைகளுக்காகவும் இப்போது விளையாடுவதில்லை - விராட் கோலி!
என்னுடைய மனநிலை எல்லாம் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தர வேண்டும். ஆடுகளத்தில் அதிக நேரம் நின்று பேட்டிங் செய்ய வேண்டும். இது மட்டும் தான் தற்போது என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது என இந்திய வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
இந்த மோசமான தோல்வி ஏமாற்றத்தையும், வேதனையையும் கொடுத்துள்ளது - தசுன் ஷனகா!
இந்திய அணியுடனான இந்த படுதோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷானகா, தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறோம் - ரோஹித் சர்மா!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியதையடுத்து, அடுத்த தொடருக்கு தயாராகி வருவதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐஎல்டி20: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியில் டெசர்ட் வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 போட்டியில் டெசர்ட் வைப்பர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
SA20 League: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
ZIM vs IRE 3rd T20I: ரியான் பர்ல் கேமியோவால் அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஜிம்பாப்வே!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
-
IND vs SL, 3rd ODI: வரலாற்று வெற்றியுடன் இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. ...
-
ஐஎல்டி20: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs SL: களத்தில் காயமடைந்த இலங்கை வீரர்; ஸ்ட்ரெட்சரில் தூக்கி சென்றதால் பரபரப்பு!
இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது, இலங்கை வீரர்கள் வாண்டர்சே மற்றும் பண்டாரா ஆகிய இருவரும் மோதியதில் பண்டாராவிற்கு காயம் ஏற்பட்டு, ஸ்ட்ரெட்ச்சரில் தூக்கி செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
SA20 League: டி காக், கிளாசென் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்தது டிஎஸ்ஜி!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் தொடர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 217 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs IRE, 3rd T20I: அயர்லாந்தை 149 ரன்களில் சுருட்டியது ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL, 3rd ODI: விராட் கோலி, ஷுப்மன் கில் மிரட்டல் சதம்; இலங்கைக்கு இமாலய இலக்கு!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 391 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி வில்லியச்ர்ஸை ஓவர்டெக் செய்தார் ரோஹித் சர்மா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியளில் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸை கடந்து முன்னிலைப் பெற்றார் ரோஹித் சர்மா. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47