England cricket board
இங்கிலாந்து அணியின் தலமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் மேத்யூ மோட்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியனது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியானது அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறிய நிலையிலும், அரையிறுதியில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
மேற்கொண்டு இந்தாண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாடுகளும் பெரிதளவில் சொல்லிக்கொள்ளும் படி இல்லாமல் இருந்தது. இருப்பினும் அந்த அணி தட்டுத்தடுமாறி அரையிறுதிச்சுற்று வரை முன்னேறி இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு பொறுபேற்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாகா இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அவர் இன்று பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Cricket News on England cricket board
-
ஓய்வுக்கு பிறகும் இங்கிலாந்து அணியுடன் பயணிக்கவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், அதன்பின் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் தொடரை விட ஐபிஎல் சிறந்தது - மைக்கேல் வாகன்!
ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த தங்களது அணி வீரர்களை திரும்ப அழைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தவறு செய்துவிட்டது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகளில் பங்கேற்க மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஜோஃப்ரா ஆர்ச்சர் கம்பேக்!
நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கெற்கும் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ரெஹான் அஹ்மத் விசா பிரச்சனை; விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த ஈசிபி!
விசா பிரச்சனையில் சிக்கிய இங்கிலாந்து வீரர் ரெஹான் அஹ்மதுவிற்கி உதவிய விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டாம் - ஆர்ச்சருக்கு கட்டளை விதித்த இங்கிலாந்து!
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பணிச்சுமை மற்றும் உடற்தகுதி காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை பங்கேற்க வேண்டாம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ...
-
Ashes 2023: ஓய்வு முடிவை திரும்ப பெற்ற மொயீன் அலி; இங்கிலாந்து அணியில் சேர்ப்பு!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்தின் ஒப்பந்த பட்டியளிலிருந்து வெளியேறு ஜேசன் ராய்; ரசிகர்கள் அதிர்ச்சி!
அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் தொடர்ந்து விளையாடுவதற்காக ஜேசன் ராய் இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான ஒப்பந்தத்தை அதிரடியாக முறித்துக் கொண்டுள்ளார். ...
-
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்த ஹர்ஷா போக்லே!
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களையும், அந்த நாட்டு ஊடகங்களையும் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே மான்கட் விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி தொடர் நடத்த வாய்ப்பில்லை - பிசிசிஐ!
இந்தியா- பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய கிரிக்கெட் வீராங்கனையின் உடமைகள் திருட்டு; இங்கிலாந்தில் புதிய சர்ச்சை!
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தானியா பாட்டியாவின் உடமைகள் இங்கிலாந்தில் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து!
17 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ...
-
ஸ்டோக்ஸை எச்சரித்த கெவின் பீட்டர்சன்!
ஒருநாள் போட்டிகளில் மட்டும் தற்போது ஓய்வு அறிவித்துள்ள பென் ஸ்டோக்ஸ்-க்கு எச்சரிக்கை விடும் விதமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சன் ஒரு ட்வீட் செய்துள்ளது தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது. ...
-
பென் ஸ்டோக்ஸின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? புதிய சர்ச்சையில் இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47