England cricket team
இந்தியாவில் அதிக டி20 ரன்கள்; முகமது நபியின் சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்!
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 24 ரன்கள் எடுத்தார். மேலும் அவர் இப்போட்டியில் ரன்களைக் குவிக்க தவறிய போதிலும், ஒரு சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.
அதன்படி இந்தியாவில் அதிக டி20 ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நபியின் சாதனையை ஜோஸ் பட்லர் முறியடித்துள்ளார். ஜோஸ் பட்லர் இந்தியாவில் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மொத்தமாக 563 ரன்களை எடுத்துள்ளார். இதில் நான்கு அரைசதங்களும் அடங்கும். முன்னதாக இந்தப் பட்டியலில், ஆஃப்கானிஸ்தானின் முகமது நபியை இந்திய மண்ணில் 25 போட்டிகளில் மூன்று அரைசதங்களுடன் 556 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on England cricket team
-
ஆதில் ரஷித் எங்கள் அணியில் மிக முக்கியமான வீரர் - ஜோஸ் பட்லர்!
எங்கள் அணி வீரர்கள் இன்று மிகவும் சிறப்பாக பந்து வீசியதுடன், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது நன்றாக இருந்தது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG, 3rd T20I: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!
சர்வதேச டி20 போட்டிகளில் 3500 ரன்களை எட்டிய முதல் இங்கிலாந்து வீரர் மற்றும் உலகின் ஆறாவது வீரர் என்ற பெருமையை ஜோஸ் பட்லர் பெற்றுள்ளார். ...
-
இந்திய அணி வெற்றி பெற்றதற்கான முழு புகழும் திலக் வர்மாவை சாரும் - ஜோஸ் பட்லர்!
இப்போட்டியில் நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாகவும், அனைவரும் தங்களது முழு உழைப்பையும் கொடுத்ததை பார்ப்பது மிகவும் நன்றாக இருந்தது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ...
-
IND vs ENG: இரண்டாவது போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் 12 பேர் கொண்ட அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!
சர்வதேச கிரிக்கெட்டில் 350+ சிக்ஸர்கள் என்ற எண்ணிக்கையை எட்டிய முதல் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மற்றும் உலகின் எட்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் ஜோஸ் பட்லர் பெற்றுள்ளார். ...
-
நாங்கள் ஆக்ரோஷமாக இருக்க விரும்புகிறோம் - ஜோஸ் பட்லர்!
நாங்கள் ஆக்ரோஷமாக இருக்க விரும்புகிறோம், ஆனால் நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் ஒரு அணிக்கு எதிரான இதனை செய்வதற்கு மிகவும் உற்சாகமானதாக உள்ளது என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs இங்கிலாந்து டி20 தொடர்: இடம், நேரம், நேரலை & அணிகளின் விவரம்!
இந்தியா - இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை, இடம், நேரம் மற்றும் நேரலை விவரங்களை இப்பதிவில் பார்ப்போம். ...
-
IND vs ENG, 1st T20I: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய தொடர் இங்கிலாந்து அணிக்கு ஒரு பயிற்சியாக அமையும் - பிரண்டன் மெக்கல்லம்
இந்திய அணிக்கு எதிரான இத்தொடரானது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு ஒரு பயிற்சியாக அமையும் என இங்கிலாந்து அணி தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை நிகழ்த்த காத்திருக்கும் பட்லர்!
இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஜோஸ் பட்லர் மேற்கொண்டு 33 ரன்கள் எடுத்தால், டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டவுள்ளார். ...
-
மீண்டும் காயத்தை சந்தித்த ஸ்டோக்ஸ்; மூன்று மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் காயம் தீவிரமடைந்துள்ளதால், அவர் காயத்தில் இருந்து குணமடையை குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை, இந்திய தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியா மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கான இங்கிலாந்து ஒருநாள் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு இடம் கிடைக்கவில்லை. ...
-
மீண்டும் காயத்தை சந்தித்த ஸ்டோக்ஸ்; இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47