In australia
நம்பர் ஒன் இடத்தில் ஜடேஜாவை பார்ப்பதில் மகிழ்ச்சி - ரவி சாஸ்திரி!
இந்திய அணியானது தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இந்திய அணியானது இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் மார்ச் 1ஆம் தேதி இந்தூரில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே பேட்டிங் மற்றும் பவுலிங் என சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா ஆட்டநாயகன் விருதினை வென்றதோடு சேர்த்து ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் ஆல்ரவுண்டர் பட்டியலில் நம்பர் 1 ஆல்ரவுண்டராகவும் தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக பல்வேறு முக்கிய தொடர்களை தவறவிட்ட ஜடேஜா அதன் பிறகு தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது.
Related Cricket News on In australia
-
இந்திய அணியின் தொடக்க வீரர் யார்? - சௌரவ் கங்குலியின் பதில்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் இந்திய அணியின் தொடக்க வீரராக கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யார் இறங்கவேண்டும் என்பது குறித்து முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார். ...
-
இனி துணைக்கேப்டன் பதவியே தேவையில்லை -ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் துணைக்கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ள சூழலில் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததுடன், இனி அப்பதவியே தேவையில்லை என விளாசியுள்ளார். ...
-
IND vs AUS: இந்தியா 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் - சௌரவ் கங்குலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று இந்திய் அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி கணித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அணியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது தவறு - கிரேக் சேப்பல்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணியில் வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது தவறாகும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் தெரிவித்தார். ...
-
பாட் கம்மின்ஸை வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லுவேன் - ஜேஷன் கில்லஸ்பி!
குடும்பம் மற்றும் நண்பர்கள் மேலும் உடல் நலம் சரியில்லாத தயாருடன் இருப்பதைவிட தொடரை இழந்துவிட்ட நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது முக்கியமா என்று கேட்டால் நிச்சயம் முக்கியம் கிடையாது என ஜேஷன் கில்லஸ்பி தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அணி சிறப்பாக போராடியது - கிளென் மேக்ஸ்வெல்!
இந்தியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அந்த அணிக்கு ஆதரவாக கிளென் மேக்ஸ்வேல் பேசியுள்ளார். ...
-
இந்திய அணியின் துணைக்கேப்டன் தேர்வு குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்ப்டன் பொறுப்பிற்கு ரவீந்திர ஜடேஜா சரியாக இருப்பார் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
சுலபமான பந்தை வீசி விரித்த வலையில் நான் சிக்கிக் கொண்டேன் - பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப்!
சுழற் பந்துவீச்சை ரஹானே விடமிருந்து தான் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தாம் கற்றுக் கொண்டேன் என்று ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் எதிர்பார்த்தபடி எங்கள் வழியில் செல்லவில்லை - டெவிட் வார்னர்!
காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியில் செல்வது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
நாசர் ஹுசைன் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
வரலாற்றில் பலமுறை இது போல் புற்கள் தடுத்து நிறைய பேர் ரன் அவுட்டாகியுள்ளதாகவும், அணி குழந்தைகளைப் போல் அல்லாமல் முதிர்ச்சியுடன் விளையாடியதாகவும் நாசர் ஹுசைன் கருத்துக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
திறமை வாய்ந்தவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை - கௌதம் கம்பீர்!
கேஎல் ராகுலை பற்றி விமர்சிப்பவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் எவ்வளவு கடினம் என்பது தெரியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
பாட் கம்மின்ஸ் கேப்டன்சியிலிருந்து விலக வேண்டும் - இயான் ஹீலி!
கம்மின்ஸ் நீண்ட காலம் கேப்டன் பதவியை சுமந்து கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. அவர் ஒரு பந்துவீச்சாளராக முடிப்பதையே நான் விரும்புகிறேன் என முன்னாள் வீரர் இயான் ஹீலி தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் - மைக்கேல் ஹஸ்ஸி அட்வைஸ்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் ரோஹித் சர்மாவை பார்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள் என முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் சவால் நிறைந்தாக இருக்கும் - ஆகாஷ் சோப்ரா!
ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24