In super
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவிலிருந்து விலகும் கேஎல் ராகுல்?
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 இக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆயூஸ் பதோனி 55 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 48 ரன்களும் எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக்க் சர்மா ஆகியோர் போட்டியின் முதல் ஓவரில் இருந்தே லக்னோ அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 16 பந்துகளிலும், அபிஷேக் சர்மா 19 பந்துகளிலும் என தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். இருவரும் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்ததுடன், பரபட்சம் பார்க்காமல் பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசியதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டியது.
Related Cricket News on In super
-
மருத்துவரின் ஆலோசனையையும் மீறி தோனி விளையாடி வருகிறார் - சிஎஸ்கே நிர்வாகி!
மகேந்திர சிங் தோனி முழு உடல் தகுதியுடன் இல்லாததாலும், அணியில் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் இல்லாததாலும், அவரால் ஓய்வெடுக்க முடியவில்லை என சிஎஸ்கேவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் நாடு திரும்பிய பதிரனா; சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா இலங்கை திரும்பியுள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
இந்த சீசனில் மயங்க் யாதவ் இனி விளையாடமாட்டார் - ஜஸ்டின் லங்கர்!
காயம் காரணமாக அவதிப்பட்டுவரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், இந்த சீசனில் இனி விளையாடமாட்டார் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கே முகாமிலிருந்து வெளியேறி முஸ்தஃபிசூர்; தோனி கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்!
விரைவில் உங்களுடன் இணைந்து விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என மகேந்திர சிங் தோனி குறித்து முஸ்தஃபிசூர் ரஹ்மான் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார். ...
-
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் தீபக் சஹார்?
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்த சிஎஸ்கே வீரர் தீபக் சஹார், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்தும் விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் மயங்க் யாதவ்?
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்த லக்னோ அணி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மயங்க் யாதவ் தனது உடற்தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார் - மோர்னே மோர்கல்!
மயங்க் யாதவைப் தனது அனைத்து உடற்தகுதி சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகினார் டெவான் கான்வே; ரிச்சர்ட் கிளீசனை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய டெவான் கான்வேவிற்கு பதிலாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசனை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
வலைபயிற்சியில் மயங்க் யாதவ்; லக்னோ அணி ரசிகர்கள் கொண்டாட்டம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: கேகேஆர் அணிக்கு எதிராக புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் லக்னோ!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது புதிய ஜெர்ஸி அணிந்து விளையாடவுள்ளது. ...
-
சிஎஸ்கேவுக்கு எதிராக மயங்க் யாதவ் விளையாடுவார் - ஜஸ்டின் லாங்கர்!
காயத்தால் அவதிப்பட்டு வரும் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டிங் லங்கர் தெரிவித்துள்ளார். ...
-
மயங்க் யாதவின் உடல்நிலை குறித்து அப்டேட் வழங்கிய எல்எஸ்ஜி சிஇஓ!
நேற்றைய போட்டியின் போது மயங்க் யாதவ் அடிவயிற்றுப் பகுதியில் வலியை உணர்ந்தாதன் காரணமாகவே போட்டியிலிருந்து பாதியில் விலகினார் என லக்னோ அணியின் சிஇஓ வினோத் பிஷ்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : சிஎஸ்கேவை முந்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் ஷிவம் மாவி!
நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட ஷிவம் மாவி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47