India tour
சஞ்சு சாம்சனிற்கு சரியான வாய்ப்பை கொடுக்க வேண்டும் - காம்ரன் அக்மல்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. டிரினிடாட் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 150 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிசான் 6, கில் 3, சூரியகுமார் யாதவ் 21, ஹர்திக் பாண்டியா 19, சஞ்சு சாம்சன் 12 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் அசத்திய திலக் வர்மா வருமா 39 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் சோதனை என்ற பெயரில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்து வரும் மாற்றங்கள் நிறைய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உலகக்கோப்பைக்கு 100 நாட்கள் கூட இல்லாத நிலையில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் 12 வருடங்கள் கழித்து ரோகித் சர்மாவை 7வது இடத்தில் களமிறக்கிய அவருடைய சோதனைகள் 2ஆவது போட்டியில் 5 வருடங்கள் கழித்து தோல்வியை கொடுத்தது. அந்த வரிசையில் இந்த போட்டியில் பொதுவாக 1 முதல் 4 வரையிலான டாப் ஆர்டரில் விளையாடக்கூடிய சஞ்சு சாம்சன் சம்பந்தமின்றி 6ஆவது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பைப் பெற்று அழுத்தமான சூழ்நிலையில் 1 சிக்சருடன் 12 ரன்களில் ரன் அவுட்டானார்.
Related Cricket News on India tour
-
ரோஹித், கோலி யாருடைய விக்கெட் கடினம்? - கைல் மேயர்ஸ் பதில்!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரது விக்கெட்டில் யாருடைய விக்கெட் மதிப்பு வாய்ந்தது என்ற கேள்விக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கைல் மேயர்ஸ் பதிலளித்துள்ளார். ...
-
WI vs IND, 1st T20I: இந்தியாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விண்டீஸ் த்ரில் வெற்றி!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அறிமுக போட்டியிலேயே அசாத்தலான கேட்ச் பிடித்து அசத்திய திலக் வர்மா - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான்சன் சார்லஸ் கொடுத்த கேட்சை இந்திய அணியின் அறிமுக வீரரான திலக் வர்மா டைவ் அடித்து பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WI vs IND 1st T20I: விண்டீஸை 149 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே விண்டீஸ் டாப் ஆர்டரை காலி செய்த சஹால் - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய வீரர் யுஸ்வேதிர சஹால் தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ...
-
10 ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்த உனாத்கட்; தனித்துவ சாதனை!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணியில் இடம்பிடித்ததுடன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
இந்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க விரும்பினேன் - ஷுப்மன் கில்!
இந்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க விரும்பினேன். ஆனால் என்னால் அது முடியாமல் போனது. இருந்தாலும் இறுதியில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
அடிப்படை வசதிகளையாவது எதிர்பார்க்கிறோம் - ஹர்திக் பாண்டியா!
அடுத்த முறை இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் வரும் போது, பயணம் உள்ளிட்ட வசதிகளை திட்டமிட்டு செய்தால் நன்றாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய கிரிக்கெட்டராக இருப்பது அவ்வளவு சுலபம் அல்ல - சஞ்சு சாம்சன்!
கடந்த எட்டு ஒன்பது வருடமாக இந்தியாவுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் இப்படி விளையாடி விளையாடி பழகிவிட்டது என்று இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
இன்றைய நாள் எங்களது நாளாக அமையவில்லை - ஷாய் ஹோப்!
ஒரு போட்டியில் நாங்கள் சாம்பியன் அணி போல விளையாடி வெற்றி பெறுகிறோம். மற்றொரு போட்டியில் முற்றிலும் தோற்று காலியாகி விடுகிறோம் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ...
-
ஒரு கேப்டனாக இது போன்ற வெற்றியைத் தான் நான் எதிர்பார்க்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர்கள். இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு தேவையான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது என ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். ...
-
WI vs IND, 3rd ODI: விண்டீஸை பந்தாடி தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
-
WI vs IND, 3rd ODI: சிக்சர் மழை பொழிந்த சாம்சன், ஹர்திக்; விண்டீஸுக்கு 352 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 352 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47