Indian
ஹர்திக் பாண்டியாவை நினைத்தால் தான் பயமாகவுள்ளது - கபில் தேவ்!
ஐசிசி நடத்தும் 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்கு முன் 1987, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் இம்முறை முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்நிலையில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் 2013க்குப்பின் தொடர்ந்து கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த இந்தியா நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. எனவே இம்முறை அதை எப்படியாவது உடைத்து வெற்றி காண வேண்டும் என்ற முனைப்புடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Indian
-
சர்ஃப்ராஸ் கானை தேர்வு செய்யாதது ஏற்புடையதல்ல - சவுரவ் கங்குலி!
கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சர்ஃஃப்ராஸ் கான் விளாசிய ரன்களுக்காகவே அவரை இந்திய அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
நான் எதிர்கொண்டதிலேயே இவர் தான் மிகவும் கடினமான பவுலர்: ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சுரேஷ் ரெய்னா!
நான் வலைப்பயிற்சியில் எதிர்கொண்ட மிகவும் கடினமான பவுலர் மகேந்திர சிங் தோனி தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா யாரும் அறிந்திராத நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த சேவாக்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார். ...
-
ரோஹித் - கில் தொடக்க வீரர்களாக விளையாடக் கூடாது - ரவி சாஸ்திரி!
வரவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை களமிறங்கக் கூடாது என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
தனது பிறந்த நாளை மாற்றிய ரிஷப் பந்த்; ரசிகர்கள் நெகிழ்ச்சி!
கார் விபத்தில் சிக்கி தற்போது குணமடைந்து வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாளை மாற்றிய சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையவைத்துள்ளது. ...
-
யுவி-க்கு முன் தோனி களமிறங்கியது எந்த சுயநலமும் இல்லை - முத்தையா முரளிதரன்!
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு முன் மகேந்திர சிங் தோனி களமிறங்கியதில் எந்த சுயநலனும் இல்லை என்று இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். ...
-
விராட் கோலிக்காக இம்முறை இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் - விரேந்திர சேவாக்!
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை நாங்கள் சச்சின் டெண்டுல்கருக்கு பரிசளித்ததைப் போல இந்த உலகக்கோப்பையை வென்று விராட் கோலிக்கு இந்திய வீரர்கள் பரிசளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
வெளியான பும்ராவின் பயிற்சி குறித்த அப்டேட்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பும்ரா, ஒரு நாளில் 7 ஓவர்கள் மட்டும் பந்துவீசி பயிற்சி செய்து வருவது தெரிய வந்துள்ளது. இதனால் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்று ரசிகர்களிடையே பார்க்கப்படுகிறது. ...
-
சஞ்சு சாம்சனால் நிலைத்தன்மையை அவரால் காட்ட முடிவதில்லை - சபா கரீம்!
சாம்சன் இடம் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் அவர் திறமையானவர். ஆனால் துரதிஷ்டவசமாக தனது பேட்டிங்கில் நிலைத்தன்மையை அவரால் காட்ட முடிவதில்லை என சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
-
பிரித்வி ஷா எந்த தவறும் செய்யவில்லை - காவல்துறை விளக்கம்!
பிரித்வி ஷா எந்த தவறும் செய்யவில்லை, எல்லாவற்றுக்கும் காரணம் இந்த நடிகை ஸ்வப்னா கில் தான் என்று மும்பை காவல்துறையினர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளனர். ...
-
WI vs IND: பயிற்சி போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அங்கு இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
இந்திய அணியை சோக்கர்ஸ் என்று நான் சொல்ல மாட்டேன் - ரவி சாஸ்திரி!
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடந்த தவறை மனதில் வைத்து முழங்கால் நடுக்கத்தோடு உலகக் கோப்பைக்கு போகக்கூடாது என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் ரிங்கு சிங்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரின் போது கலக்கிய ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்ஃப்ராஸ் தேர்வுவாகதது இதற்காக தான்; தேர்வு குழுவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
களத்திலும், களத்திற்கு வெளியிலும் சர்ஃப்ராகனின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் தான் அவரை தேர்வு செய்யவில்லை என வெளியான தகவலால் தேர்வு குழுவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24