Indian cricket team
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி; ஐசிசி அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனப்படும் கிரிக்கெட் தொடரை அறிமுகம் செய்தது. அதன்படி இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்நிலையில் ரசிகர்களின் காத்திருப்புக்கு ஐசிசி இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியின் தேதி மற்றும் இடத்தை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இன் இறுதிப் போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 11 முதல் 15 வரை நடைபெறும் என்றும், இப்போட்டிக்கான ரிஸர்வ் டேவாக ஜூலை 16ஆம் தேதி கடைபிடிக்கப்ப்டும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.
Related Cricket News on Indian cricket team
-
ரோஹித் தேர்வு செய்யும் வீரர்களுக்கு 100 சதவீதம் ஆதரவு கொடுப்பார் - ரவி அஸ்வின்!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பிளேயிங் லெவனில் ஒரு வீரரைத் தேர்வு செய்தால் அந்த வீரருக்கு 100 சதவீதம் அதாரவை வழங்குவார் என சக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது - ஸ்டீவ் ஸ்மித்!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் குறித்தும் இந்திய அணி குறித்தும் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
துலீப் கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஷுப்மன் கில்!
எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் டீம் ஏ அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்!
காயம் காரணமாக எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் இருந்து நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்திய அணியின் ஆல் டைம் லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்; ரோஹித், பும்ராவுக்கு இடமில்லை!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான கௌதம் கம்பீர் தனது ஆல் டைம் சிறந்த லெவன் அணியை உருவாக்கியுள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: வெற்றியாளரை கணித்த சுனில் கவாஸ்கர்!
எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜம்பவான் சுனில் கவாஸ்கர் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
-
புஜ்ஜி பாபு கோப்பை தொடரின் போது காயமடைந்த சூர்யகுமார் யாதவ்!
டிஎன்சிஏ லெவன் அணிக்கு எதிரான புஜ்ஜி பாபு கிரிக்கெட் போட்டியின் போது மும்பை அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் கயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு; சமித் டிராவிட்டிற்கு இடம்!
ஆஸ்திரேலிய அண்டர்19 அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் நான்கு நாள் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அண்டர் 19 அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
எதிர்வரும் துலீப் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
என்னைத் தடுக்க உலகில் யாரும் இல்லை - ஜஸ்பிரித் பும்ரா!
நான் என் வேலையைச் சரியாகச் செய்தால், என்னைத் தடுக்க உலகில் யாரும் இல்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன் என்று இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவர் தான் - வெங்கடேஷ் ஐயர் ஓபன் டாக்!
விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரில் தனக்கு மிகவும் பிடித்தமான வீரர் யார் என்பதை இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர் தேர்வு செய்துள்ளார். ...
-
சுனில் நரைனைப் போல் பந்துவீசிய ஸ்ரேயாஸ் ஐயர் - வைரல் காணொளி!
டிஎன்சிஏ லெவன் அணிக்கு எதிரான புஜ்ஜி பாபு லீக் போட்டியில் மும்பை வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சுனில் நரைனை போல் பந்துவீசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ரவீந்திர ஜடேஜா விலகல்!
எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் சுற்று போட்டிகளில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை விடுவிப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ...
-
உலக டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்த சஞ்சய் பங்கர்; ரூட், ஸ்மித்திற்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களைக் கொண்டு உருவாக்கிய உலக டெஸ்ட் லெவனை அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24