Indian cricket team
இந்திய அணியின் தோல்விக்கு இதுவே காரணம் - வாசிம் அக்ரம்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா தோல்வியை சந்தித்து 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.
இந்நிலையில் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றதால் இறுதிப்போட்டிக்கு முன்பே இந்தியாவை சாம்பியன் அணியாக கொண்டாடிய ரசிகர்கள் மற்றும் இந்திய ஊடகங்கள் தான் இந்த தோல்விக்கு காரணம் என்று வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் மிடில் ஓவர்களில் சுமாராக விளையாடிய இந்தியா தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டு 2024 டி20 உலகக் கோப்பை பயணத்தை தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Indian cricket team
-
உலகக்கோப்பையின் பல போட்டிகளில் விளையாடாதது கவலையளித்தது - இஷான் கிஷான்!
உலகக் கோப்பைத் தொடரில் பல போட்டிகளில் விளையாடாதது கவலையளித்தது என இந்திய அணியின் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படக்கூடாது - ஜாஹீர் கான்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக யார் செயல்பட வேண்டும் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான ஜாஹிர் கான் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை விராட், ரோஹித் விளையாட வேண்டும் - பிரையன் லாரா!
வரவுள்ள டி20 உலக கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வேண்டும் என்று வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரையன் லாரா விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
என்னை அதிர்ஷ்டமில்லாத கிரிக்கெட்டர் என்கின்றனர் - சஞ்சு சாம்சன்!
நான் நினைத்ததைவிட கிரிக்கெட்டில் சாதித்து இருக்கிறேன். தற்போது அடைந்துள்ள இடம் என்பது நான் நினைத்ததைவிட பெரிது என்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
கிரிக்கெட்டை தாண்டி நிஜ வாழ்விலும் ஹீரோவாக மாறிய முகமது ஷமி - வைரல் காணொளி!
கார் விபத்தில் சிக்கிய நபர்களை இந்திய வீரர் முகமது ஷமி காப்பாற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்தியாவின் பக்கம் அதிர்ஷ்டம் இல்லை என்பதே உண்மை - சல்மான் பட்!
சூர்யகுமார் யாதவ் என்ன முயற்சி செய்தார்? என்பது எனக்கு புரியவில்லை. அவர் தவறான ஷாட்டுகளை விளையாடியது மட்டுமின்றி கடைசி கட்டத்தில் சிங்கிள்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் விமர்சித்துள்ளார். ...
-
ஒருவர் நம்பிக்கை இல்லை என்றால் அவரை அணியில் ஏன் தேர்வு செய்தீர்கள் - கம்பீர் விளாசல்!
இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா ஒரு வீரரை நம்பாமல் இருந்ததை சுட்டிக் காட்டி கௌதம் கம்பீர் விளாசி இருக்கிறார். ...
-
கேஎல் ராகுல் இப்படி செய்திருக்கக் கூடாது - சோயப் மாலிக்!
கேஎல் ராகுல் ஐம்பது ஓவர்களுக்கு பேட்டிங் செய்ய நினைத்தார். ஆனால் அவர் அப்படி நினைத்திருக்கக் கூடாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். ...
-
அதிக தன்னம்பிக்கை உங்களுக்கான வீழ்ச்சியை கொண்டு வரும் - ஷாகித் அஃப்ரிடி!
தொடர் வெற்றிகளால் வரும் அதிகப்படியான தன்னம்பிக்கை உங்களுக்கு தோல்வியை கொடுக்கும் என்று இந்திய அணி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சாம்சன், சஹால்; ரசிகர்கள் அதிருப்தி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் இருவரையும் தேர்வு செய்யாதது ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ...
-
IND vs AUS: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்; சூர்யாவுக்கு கேப்டன் பொறுப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!
இந்த போட்டியை நேரில் காண வந்த இந்திய பிரதமர் நரேந்திய மோடி தொடரின் சாம்பியன் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கிய பின்னர் இந்திய அணியின் ஓய்வறைக்கு சென்று இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். ...
-
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் கேப்டன்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கொப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், 1983 உலகக் கோப்பையை வென்றவருமான கபில் தேவ், ரோஹித் சர்மாவிற்கு ஆறுதல் கூறியுள்ளார். ...
-
விராட் கோலிக்கு தனது ஜெர்சியை பரிசளித்த சச்சின் டெண்டுல்கர்!
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக வழங்கி முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கௌரவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24