M sundar
ZIM vs IND, 1st T20I: அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே; போராடி வீழ்ந்தது இந்தியா!
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயாம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரேல் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு இன்னசெண்ட் கையா மற்றும் வெஸ்லி மதேவெரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இன்னசெண்ட் கையா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் மதேவெராவுடன் இணைந்த பிரையன் பென்னெட் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 23 ரன்களில் பிரையன் பென்னெட்டும், 21 ரன்களில் வெஸ்லி மதேவெராவும் விக்கெட்டை இழந்தனர்.
அதனைத்தொடர்ந்து இணைந்த கேப்டன் சிக்கந்தர் ரஸா மற்றும் தியான் மேயர்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த கேப்டன் சிக்கந்தர் ரஸா 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜானதன் காம்பெல் முதல் பந்திலேயே ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்ட, ஜிம்பாப்வே அணியானது 74 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின்னர் தியான் மெயர்ஸும் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வெலிங்டன் மஸகட்ஸாவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on M sundar
-
ZIM vs IND, 1st T20I: பிஷ்னோய், வாஷிங்டன் சுழலில் 116 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது 116 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: மும்பை அணிக்கு எதிராக தடுமாறும் தமிழ்நாடு!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐந்தாவது டெஸ்ட்: கேஎல் ராகுல் விலகல்; வாஷிங்டன் சுந்தர் விடுவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஹர்பஜன் சிங்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். ...
-
IND vs ENG: இரண்டாவது டெஸ்ட்லிருந்து விலகிய ராகுல், ஜடேஜா; சர்ஃப்ராஸ், சௌரவ், வாஷிக்கு வாய்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
IND vs AFG, 3rd T20I: இருமுறை சூப்பர் ஓவருக்கு சென்ற போட்டி; ஆஃப்கானை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ...
-
Asian Games 2023: மழையால் ஆட்டம் பாதிப்பு; தங்கப்பதக்கத்தை தட்டியது இந்தியா!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய விளையாட்டுபோட்டி டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டி மழையால் பாதியிலேயே ரத்துசெய்யப்பட்டதையடுத்து இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ...
-
வரவிருக்கும் ஆட்டங்களில் நாங்கள் நம்பிக்கையுடன் செயல்படுவோம்- ருதுராஜ் கெய்க்வாட்!
ஆடுகளம் கொஞ்சம் சவாலாக இருந்தது. குறிப்பாக இந்த நிலைமை எங்களுக்கு பழக்கம் இல்லை என ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
நான் நானாக இருக்கவே முயற்சி செய்வேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
நான் தோனி இடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன்.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும் என இந்திய அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
வாஷிங்டன் சுந்தருக்கு சரியான வாய்ப்புகள் தரப்பட்டு ஊக்குவிக்கப்படவில்லை - டபிள்யூ.வி.ராமன்!
வாஷிங்டன் சுந்தr மீண்டும் மீண்டும் பேட்டிங்கில் தன்னுடைய திறமையை நிரூபித்த போதிலும் அவருக்கு என்ன நடந்தது? அவருக்கான சரியான வாய்ப்புகள் தரப்பட்டு ஊக்குவிக்கப்படவில்லை என முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் கூறியுள்ளர். ...
-
IND vs AUS, 3rd ODI: தொடலிருந்து விலகிய அக்ஸர் படேல்; வாஷிங்டன் சுந்தருக்கு இடம்?
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக அக்ஸர் படேல் விலகியுள்ளார். ...
-
Asian Games 2023: ஆடவர் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் நடைபெறும் ஆடவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs AUS: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய அக்ஸர் படேல்; வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியிலிருந்து விலகிய அக்ஸர் படேலுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47