My captain
டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மகேந்திர சிங் தோனி புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். அதன்படி இது மகேந்திர சிங் தோனியின் 400ஆவது டி20 போட்டியாகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 400+ போட்டிகளில் விளையாடிய 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
Related Cricket News on My captain
-
ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகிய ருதுராஜ்; கேப்டனாக தோனி நியமனம்!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகா எம் எஸ் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
அணியை முன்னோக்கி வழிநடத்த தயாராக உள்ளேன் - அக்ஸர் படேல்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையான தருணம் என இந்திய அணி ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி தொடர்களில் கேப்டனாக புதிய வரலாறு படைத்த ரோஹித் சர்மா!
ஐசிசி நடத்தும் அனைத்துவிதமான தொடர்களிலும் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன் எனும் தனித்துவ சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
பும்ராவை முழுநேர கேப்டனாக நியமிப்பதற்கு முன் பிசிசிஐ இதனை செய்ய வேண்டும் - முகமது கைஃப்!
ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது ஆட்சேபனை தெரிவித்துள்ளார். ...
-
பும்ரா கேப்டனாக பதவியேற்றல் ஆச்சரியப்படப் போவதில்லை - சுனில் கவாஸ்கர்!
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிர்காலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவியேற்றால் ஆச்சரியப்படப் போவதில்லை என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
SA vs PAK: கேப்டனாக தனித்துவ சாதனை படைத்த டெம்பா பவுமா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக செயல்பட்ட முதல் 9 போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவுசெய்து இரண்டாவது வீரர் எனும் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் டெம்பா பவுமா படைத்துள்ளார். ...
-
சக அணி வீரர்களை பாராட்டிய தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா!
இத்தொடரின் முடிவில் அணியில் உள்ள பல தோழர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் என்றால் என்ன என்பது குறித்து சரியான அர்த்தம் கிடைத்திருக்கும் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
SA vs SL, 2nd Test: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன் டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? - வெங்கி மைசூர் விளக்கம்!
ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்னர் கேகேஆர் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியளில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை தக்கவைக்காதது குறித்து அணியின் நிர்வாக இயக்குனர் வெங்கி மைசூர் விளக்கமளித்துள்ளார். ...
-
நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் டிம் சௌதீ!
அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டிம் சௌதீ இன்று அறிவித்துள்ளார். ...
-
வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது - ரோஹித் சர்மா!
இப்போட்டியில் வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டமாக இருந்தது. அதனால் நாங்கள் 100-150 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் அதற்கு தயாராக இருந்தோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
T20 WC 2024: பாகிஸ்தான் பேட்டர்கள் சொதப்பல்; அமெரிக்க அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்க அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிஎஸ்கே கேப்டன் பதவியை துறந்தார் எம் எஸ் தோனி; புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியதையடுத்து அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24