Sa vs sl test
பாக்ஸிங் டே டெஸ்ட்: டிராவில் முடிவடைந்த ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்ஸில் 586 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 153 ரன்களையும், கிரேய்க் எர்வின் 104 ரன்களையும் மற்றும் பிரையன் பென்னட் 110 ரன்களையும் சேர்த்தனர்.
ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அல்லா கசான்ஃபர் 3 விக்கெட்டுகளையும், நவீத் ஸத்ரான், ஜாகீர் கான் மற்றும் ஸியா உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் செதிகுல்லா அடல் 3 ரன்னிலும், அப்துல் மாலிக் 23 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on Sa vs sl test
-
நான் பங்கேற்ற சிறந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்று - பாட் கம்மின்ஸ்!
இது ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி, நான் பங்கேற்ற சிறந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக இதனை கருதுகிறேன் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் களமிறங்கினோம் - ரோஹித் சர்மா!
இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் களமிறங்கினோம். நாங்கள் இறுதிவரை போராட விரும்பினோம், துரதிர்ஷ்டவசமாக எங்களால் அதைச் செய்ய முடியவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; இந்திய அணி அதிர்ச்சி தோல்வி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கவாது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்ச்சைகுரிய முறையில் விக்கெட்டை இழந்தது தற்சமயம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
மீண்டும் தேவையில்லாத ஷாட்டை விளையாடி விக்கெட்டை இழந்த பந்த் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முக்கியமான கட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்த விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம் ஒரு ஆண்டில் மிகக்குறைந்த சராசரியை கொண்ட வீரர்கள் (டாப் 7-ல்) பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
BGT 2024-25: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: மீண்டும் சொதப்பிய ரோஹித், கோலி; தோல்வியைத் தவிர்க்குமா இந்தியா?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இறுதிநாளில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறி வருகிறது. ...
-
எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - ஷான் மசூத்!
நாங்கள் பேட்டிங் செய்யும் போது கூடுதல் ரன்களை எடுத்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் ரன்களை சேர்க்க முடியவில்லை என பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இந்தியாவிற்கு 340 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் - வெற்றி குறித்து டெம்பா பவுமா நெகிழ்ச்சி!
இப்போட்டியில் நாங்கள் தடுமாறிய நிலையிலும், இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ரன் குவிப்பில் ஆஃப்கானிஸ்தான்; மழையால் ஆட்டம் பாதிப்பு!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதித்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: கம்மின்ஸ், லையன், போலண்ட் அபாரம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 333 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24