Shubman gill
ZIM vs IND, 4th T20I: தொடரை வென்றதுடன் சாதனைகளையும் குவித்த இந்திய அணி!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டியானது இன்று ஹராரேவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ரஸா 46 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வல் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 93 ரன்களையும், கேப்டன் ஷுப்மன் கில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 58 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 15.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Related Cricket News on Shubman gill
-
எனது பேட்டிங்கை நான் மிகவும் ரசித்தேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இப்போட்டியை இறுதிவரை களத்தில் இருந்து முடித்து கொடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs IND, 4th T20I: ஜெய்ஸ்வால், ஷுப்மன் அதிரடியில் டி20 தொடரை வென்றது இந்தியா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
ஃபீல்டிங் எப்போதுமே எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது - சிக்கந்தர் ரஸா!
இந்த போட்டியில் சரியாக ஃபில்டிங் செய்யாத காரணத்தால் நாங்கள் கூடுதலாக 20 ரன்கள் கொடுத்தோம். அந்த ரன்களே எங்களுடைய தோல்விக்கும் காரணமாக அமைந்தது என ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா தெரிவித்துள்ளார். ...
-
அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர் - ஷுப்மன் கில்!
இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதே வெற்றிக்கான காரணம் என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs IND, 3rd T20I: வாஷிங்டன் சுந்தர் அசத்தல்; தொடரில் முன்னிலைப் பெற்றது இந்திய அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ZIM vs IND, 3rd T20I: ஷுப்மன், ருதுராஜ் அதிரடியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மீண்டும் வெற்றிப் பாதையில் திரும்பியது மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
பவர்பிளேயில் பந்து ஸ்விங்கான போது விளையாடுவது எளிதானது அல்ல. ஆனால் அபிஷேக், ருதுராஜ் இருவரும் அற்புதமாக பேட்டிங் செய்தனர் என ஷுப்மன் கில் பாராட்டியுள்ளார். ...
-
எங்களுடைய இந்த தோல்விக்கு காரணம் இது தான்; ஷுப்மன் கில் விளக்கம்!
இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே எங்களுடைய தோல்விக்கு முக்கிய காரணம் என இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ZIM s IND, 1st T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி சாதனை படைக்குமா இளம் இந்திய அணி?
ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
கெய்க்வாட்டிற்கு பதில் அபிஷேக்கை தேர்வு செய்த ஷுப்மன் கில்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக அபிஷேக் சர்மா களமிறங்குவார் என்று கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளைடும் இந்திய அணியின் உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி ஜூலை 06ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ZIM vs IND: ஜிம்பாப்வே புறப்பட்டது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி இன்றைய தினம் ஜிம்பாப்வே புறப்பட்டது. ...
-
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ஷுப்மன் கில்லிற்கு கேப்டன் பொறுப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜிம்பாப்வே தொடரில் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகம்!
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24