Sl vs eng
ENG vs AUS, 1st T20I: ஹெட், அபோட் அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நேற்று சௌத்தாம்ப்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ ஷார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர்.
இதில் தொடக்கத்தில் தடுமாறிய டிராவிஸ் ஹெட், அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 59 ரன்களைச் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மிட்செல் மார்ஷ் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மேத்யூ ஷார்ட் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Sl vs eng
-
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் மிட்செல் மார்ஷ் பந்துவீச வாய்ப்பில்லை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீசுவது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் பில் சால்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஸ்டோக்ஸ், கிரௌலி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 17 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை சௌத்தாம்டனில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs AUS, 1st T20I: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. ...
-
ஆஸி தொடரில் இருந்து கஸ் அட்கின்சனுக்கு ஓய்வு; மாற்று வீரராக ஒல்லி ஸ்டோனிற்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த கஸ் அட்கின்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டு, மற்று வீரராக ஒல்லி ஸ்டோன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs SL: தொடர் நாயகன் விருதை வென்று சாதனை படைத்த ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
சதமடித்ததுடன் சாதனைகளையும் குவித்த பதும் நிஷங்கா!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வீர்ர் பதும் நிஷங்கா சதமடித்ததன் மூலம் சர்வதெச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
ENG vs SL, 3rd Test: சதமடித்து அசத்திய பதும் நிஷங்கா; இலங்கை ஆறுதல் வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய கருணரத்னே!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்களைக் கடந்த நான்காவது இலங்கை வீரர் எனும் பெருமையை அந்த அணியின் தொடக்க வீரர் திமுத் கருணரத்னே பெற்றுள்ளார். ...
-
சங்கக்காராவின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்கக்காராவை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்தின் ஜோ ரூ 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ENG vs SL, 3rd Test: நிஷங்கா அரைசதம்; வெற்றியை நோக்கி இலங்கை அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 94 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs SL, 3rd Test: ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24