The cup
T20 WC 2024, Super 8: டி காக், மில்லர் அதிரடி; இங்கிலாந்து அணிக்கு 164 ரன்கள் இலக்கு!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இந்த 8 அணிகளில் இருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குரூப் 2-இல் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.செயின்ட் லூசியாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரிஸா ஹென்றிக்ஸ் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக்கும் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on The cup
-
சர்ச்சையை ஏற்படுத்திய நடுவரின் தீர்ப்பு; வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் மார்க் வுட் பிடித்த கேட்ச்சானது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அக்காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: வங்கதேச அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் சாதனைகளை குவித்த ஆஸ்திரேலியா!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகள் படைக்கப்ப்ட்டுள்ளன. ...
-
T20 WC 2024: விராட் கோலியின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை சக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: அமெரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இந்த மைதானத்தில் இது எட்டக்கூடிய இலக்கு தான் - ரஷித் கான்!
ஐபிஎல் தொடரில் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். ஆனால் தற்போது நான் தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறேன் என ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
T20 WC 2024, Super 8: மழையால் பாதித்த ஆட்டம்; டக்வொர்த் லூயிஸ் முறையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் மழை காரணமாக ஆஸ்திரேலிய அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகில் எங்கு விளையாடினாலும் பும்ராவால் இதனை செய்ய முடியும் - ரோஹித் சர்மா!
பும்ரா எங்களுக்காக என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அவரை நாம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
T20 WC 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி பாட் கம்மின்ஸ் சாதனை - வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை காலி செய்த ரிஷப் பந்த்!
ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். ...
-
T20 WC 2024, Super 8: பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக்; வங்கதேசத்தை 140 ரன்களில் சுருட்டியது ஆஸி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024, Super 8: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
T20 WC 2024, Super 8: சூர்யா, ஹர்திக் அதிரடி; ஆஃப்கானுக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த விராட் கோலி - காணொளி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 24 ரன்களில் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24