The hardik pandya
தோனி செய்ததையே தற்போது ஹர்த்திக்கும் செய்துகொண்டிருக்கிறார் - யுஸ்வேந்திர சஹால்!
இந்திய கிரிக்கெட்டுக்கு கபில்தேவுக்கு அடுத்து நம்பிக்கைக்குரிய ஒரு நிலையான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஐபிஎல் தொடர் மூலம் கிடைத்தவர் ஹர்திக் பாண்டியா. ஆனால் இந்த நம்பிக்கை அதிக ஆண்டுகள் நீடிக்க வில்லை. 2018 ஆம் ஆண்டு காயத்தில் சிக்கிய அவர் அணியில் இருந்து விலகினார். அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்து வந்தவர், 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு வந்து, பிறகு தாமாக கேட்டுக் கொள்வதற்கு முன்பாக அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று வெளியேறி விட்டார்.
அதற்குப் பின்பு உடல் தகுதியில் மிகக் கடுமையாக உழைத்து முன்னேறி வந்தார். இந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஹர்திக் பாண்டியாவை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தக்க வைக்காமல் ஏலத்தில் வெளியே விட்டது.அதன்பின் புதிய அணியாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை ஏலத்திற்கு விடாமல் வாங்கியதோடு கேப்டன் ஆகவும் அறிவித்தது. அவரும் அதற்கு திருப்பி கோப்பையை வென்று கொடுத்து முதல் சீசனிலேயே அசத்தினார். மேலும் இந்த ஐபிஎல் சீசனிலும் அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு வந்தார். இது மட்டும் இல்லாமல் இந்திய டி20 அணிக்கு தற்பொழுது கேப்டனாகவும் உருவாகி இருக்கிறார்.
Related Cricket News on The hardik pandya
-
அடிப்படை வசதிகளையாவது எதிர்பார்க்கிறோம் - ஹர்திக் பாண்டியா!
அடுத்த முறை இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் வரும் போது, பயணம் உள்ளிட்ட வசதிகளை திட்டமிட்டு செய்தால் நன்றாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஒரு கேப்டனாக இது போன்ற வெற்றியைத் தான் நான் எதிர்பார்க்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர்கள். இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு தேவையான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது என ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். ...
-
WI vs IND, 3rd ODI: சிக்சர் மழை பொழிந்த சாம்சன், ஹர்திக்; விண்டீஸுக்கு 352 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 352 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நாங்கள் சரியான முறையில் பேட்டிங் செய்யவில்லை - ஹர்திக் பாண்டியா!
நாங்கள் சரியான முறையில் பேட்டிங் செய்யவில்லை. முதல் இன்னிங்சை விட விக்கெட் இரண்டாவது இன்னிங்ஸூக்கு நன்றாக பேட்டிங் செய்வதற்கு மாறிவிட்டது என்று இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
அயர்லாந்து தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு?
ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை காரணமாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ...
-
ஹர்திக் பாண்டியாவை நினைத்தால் தான் பயமாகவுள்ளது - கபில் தேவ்!
ஹர்திக் பாண்டியாவை நினைத்து நான் எப்போதுமே பயப்படுகிறேன். ஏனெனில் அவர் அடிக்கடி காயத்தை விரைவாக சந்திப்பவராக இருந்து வருகிறார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா - அயர்லாந்து போட்டி அட்டவணை அறிவிப்பு!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
டெஸ்ட் அணியில் ஹர்திக் பாண்டியாவை சேர்க்க வேண்டும் - சவுரவ் கங்குலி!
டெஸ்ட் அணியில் தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி வரும் 4ஆவது பவுலர் இடத்திற்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா விளையாட வேண்டுமென இந்தியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டை ஹர்திக் பாண்டியா எளிதில் விட்டு விட்டார் - லன்ஸ் க்ளூஸ்னர்!
ஒரு வீரராக உங்களது இடத்தையும் திறமையையும் உங்களை நீங்களே சோதித்துக் கொள்வதற்கும் டெஸ்ட் கிரிக்கெட் தான் உச்சமாக உதவும் என தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் லன்ஸ் க்ளூஸ்னர் தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியா போன்ற கேப்டன் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் - சாய் சுதர்சன்!
பதிரனா பந்தைத் தாழ்வாக வீசுகிறார். அதனால் நான் இன்னும் கீழே சென்று விளையாடினேன். நான் இதை மிகவும் மனப்பூர்வமாக திட்டமிட்டு செய்யவில்லை என குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன் கூறியுள்ளார். ...
-
மோஹித் சர்மாவை ஹர்திக் பாண்டியா தொந்தரவு செய்தது ஏன்? - ஹர்திக் பாண்டியா!
சென்னை அணியுடனான இறுதி போட்டியின் கடைசி ஓவரின் போது பந்துவீச்சாளர் மோஹித் சர்மாவை, கேப்டன் ஹர்திக் பாண்டியா தொந்தரவு செய்து கொண்டே இருந்தது ஏன் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
தோனியிடம் தோற்றதில் கவலையில்லை: ஹர்திக் பாண்டியா!
தோனியிடம் தோற்றதில் கவலைப்பட மாட்டேன் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியா இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு கேப்டன் ஆவார் - மைக்கேல் வாகன்!
விரைவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி கோப்பையை தன்வசப்படுத்துமா சிஎஸ்கே?
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24