The indian cricket team
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; அடிக்கல் நாட்டும் பிரதமர்!
வாரணாசி ஆன்மீக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ள நிலையில், தற்போது இது மாநிலத்தின் முக்கியமான விளையாட்டு மையமாக உருவாக உள்ளது. வரும் 23 ஆம் தேதி வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்படும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
கிட்டத்தட்ட 31 ஏக்கர் பரப்பரளவில் கட்டப்படும் இந்த மைதானம் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, ஃப்ளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், விஐபி ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் கட்டப்படவுள்ளது.
Related Cricket News on The indian cricket team
-
மைதானங்கள் தயாரிப்பில் கட்டுப்பாடுகளை விதித்த ஐசிசி; சிக்கலில் பிசிசிஐ!
உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவுள்ள மைதானங்களில் பவுண்டரி எல்லைகள் குறைந்தபட்சம் 70 மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்று ஐசிசி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ...
-
முகமது ஷமிக்கு பெயில் வழங்கியது நீதிமன்றம்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவரது மனைவி ஹசின் ஜஹான் தாக்கல் செய்த குடும்ப வன்முறை வழக்கில் கொல்கத்தாவில் உள்ள கீழ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ...
-
உலகக்கோப்பை 2023: ரஜினிகாந்திற்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கிய ஜெய் ஷா!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக காண நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கோல்டன் டிக்கெட்டை வழங்கியுள்ளார். ...
-
ரிஷப் பந்த் எல்லொருக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளார் - ஆடம் கில்கிறிஸ்ட்!
தற்போதுள்ள விக்கெட் கீப்பர்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை ரிஷப் பந்த் செய்து காட்டியுள்ளார் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
Asian Games 2023: ஆடவர் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் நடைபெறும் ஆடவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் முன்னேறும் - ஆடம் கில்கிறிஸ்ட்!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் எந்த நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்? என்று தன்னுடைய கணிப்பை ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ் வெளியிட்டு இருக்கிறார். ...
-
உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறி எங்களுக்குள் இருக்கிறது - விராட் கோலி!
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏன் இவ்வளவு கடுமையாக உழைத்து வருகிறது என்பது குறித்து அவர் தனது மௌனத்தை கலைத்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரில் இருந்து அவரை நீக்க வேண்டும் - ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து கௌதம் கம்பீர்
ஆசியக் கோப்பை தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு முதுகு பிடிப்பால் அவதியடைந்த ஸ்ரேயாஸ் ஐயரை உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
தோனி தனது பேட்டிங்கை தியாகம் செய்துள்ளார் - கௌதம் கம்பீர் பாராட்டு!
இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக கடைசி வரிசையில் களமிறங்கி மகேந்திர சிங் தோனி தியாகம் செய்துள்ளதாக முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை 2023: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது பாகிஸ்தான்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியளில் பாகிஸ்தான் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
உலகக்கோப்பை தொடரில் அஸ்வின்? - ரோஹித் சர்மாவின் மறைமுக பதில்!
சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களை பொறுத்த வரை அனைவரும் வரிசையில் நிற்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இதைப் பற்றி அஸ்வினிடம் தொலைபேசியில் நேரடியாக பேசியுள்ளேன் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையை வெல்ல இவ்விரு அணிகளுக்கு வாய்ப்புள்ளது - குமார் சங்கக்காரா!
வரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் 140 கீமீ மேல் பந்துவீசினால் தனித்துவமாக தெரிவார் - பரஸ் ஹம்ப்ரே!
ஹர்திக் பாண்டியா மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் அடிப்பார் என்றால், அந்த இடத்தில் அவர் வித்தியாசமான பந்துவீச்சாளராக இருப்பார் என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் ஹம்ப்ரே தெரிவித்துள்ளார். ...
-
பிளேயிங் லெவனில் ஷமிக்கு இடமில்லாதது ஏன் - பரஸ் ஹம்ப்ரே விளக்கம்!
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சீனியர் வீரரான முகமது ஷமிக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்காததற்கான காரணத்தை இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பரஸ் ஹம்ப்ரே வெளியிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24