The jos buttler
கடினமாக உழைக்க உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை - ஜோஸ் பட்லர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தங்களது நான்காவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது விராட் கோலியின் சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 12 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் என 113 ரன்களைச் சேர்த்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் - ஜோஸ் பட்லர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் தனது சதத்தைப் பதிவுசெய்ததுடன், அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார்.
Related Cricket News on The jos buttler
-
ஜோஸ் பட்லர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது - சஞ்சு சாம்சன்!
எங்களுடைய பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை இந்த ஸ்கோர் நிச்சயம் எட்டக்கூடிய ஒன்று தான் என ஆர்சிபி அணிக்கு எதிரான வெற்றி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சதமடித்து அசத்திய பட்லர், அதிரடியில் மிரட்டிய சாம்சன்; ஆர்சிபியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்!
வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். ...
-
ஹெலிகாப்டர் ஷாட்டை பயிற்சி செய்யும் ஜோஸ் பட்லர்; வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நாளை நடைபெறும் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடவுள்ள நிலையில் ஜோஸ் பட்லர் பயிற்சி பெறும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2024: எம்ஐ கேப்டவுனை வீழ்த்தி பதிலடி கொடுத்தது பார்ல் ராயல்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: ராய், பட்லர் அரைசதம்; கேப்டவுன் அணிக்கு 163 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: பட்லர் அதிரடியில் ஜோபர்க்கை வீழ்த்தியது பார்ல்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இத்தோல்வியின் மூலம் சில நேர்மையான விஷயங்கள் கிடைத்துள்ளன - ஜோஷ் பட்லர்!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான டி20 தொடரை இழந்தபோதிலும் சில நேர்மறையான விஷயங்கள் இங்கிலாந்துக்கு கிடைத்துள்ளதாக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
WI vs ENG, 4th ODI: மீண்டும் சதமடித்த பிலிப் சால்ட்; இங்கிலாந்து அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WI vs ENG, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து சஞ்சு சாம்சனை நீக்க வேண்டும் - ஸ்ரீசாந்த்!
சஞ்சு கேப்டனாக இருப்பதில் அவர் அதனுடைய தீவிரத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது பட்லரை கேப்டன் ஆக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஃபார்முக்குத் திரும்பும் தருணத்தைத் தேடிக் கொண்டிருந்தேன் - ஜோஸ் பட்லர்!
மோசமான ஃபார்மிலிருந்து மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கான நேரம் வந்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
இனி பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் - ஜோஸ் பட்லர்!
இனிவரும் காலத்தில் இங்கிலாந்து ஒருநாள் அணியை கட்டமைக்கும் பொறுப்பை நான் எடுத்துக் கொள்கிறேன் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது - ஜோஸ் பட்லர்!
இந்த தொடர் ஒட்டுமொத்தமாகவே எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24