The south africa
பேட்டர்களை திக்குமுக்காட வைத்த ஜடேஜா; வைரல் காணொளி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 37ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களையும் விளாசினர். முதல் 10 ஓவர்களில் 91 ரன்களை இந்திய அணி குவித்திருந்த நிலையில், ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது. இதனால் இந்திய அணி நிதானமாக விளையாடி சிறந்த இலக்கை நிர்ணயித்தது.
அதன்பின் தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் பவுமா - டி காக் கூட்டணி களமிறங்கியது. இதில் சிராஜ் வீசிய 2வது ஓவரிலேயே டி காக் 5 ரன்களில் போல்டாகி ஆட்டமிழந்தார். பின் கேப்டன் பவுமா - வான் டர் டஸன் கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 8 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 21 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருப்பதால், ரோஹித் சர்மா உடனடியாக பந்தை ஜடேஜா கைகளில் கொடுத்தார்.
Related Cricket News on The south africa
-
பிறந்தநாளில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் மத்தியில் நான் சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சி - விராட் கோலி!
ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் மிகச் சிறப்பான தொடக்கத்தை அளித்ததால் அந்த மொமென்ட்டத்தை அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன் என சதமடித்த பின் விராட் கோலி கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: விராட் கோலி சாதனை சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 327 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 327 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகாராஜ் மாயஜாலத்தில் விக்கெட்டை இழந்த ஷுப்மன் கில் - வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ், இந்திய வீரர் ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
உலகக்கோப்பை 2023: டி வில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஏபி டீ வில்லியர்ஸ் உலக சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். ...
-
இந்திய ஸ்பின்னர்களை விளையாடுவதில் சோதிக்கும் விதமாக அமையும் - டெம்பா பவுமா!
இந்திய அணியின் தரமான சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக விளையாடுவது தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை சோதிக்கும் விதமாக அமையும் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சமபலம் வாய்ந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
தென் ஆப்பிரிக்கா இம்முறையும் இந்தியாவை வீழ்த்தும் - ரஸ்ஸி வேன்டர் டுசென்!
இதற்கு முன் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததைப் போல் இம்முறையும் நாங்கள் வெல்வோம் என்று தென் ஆப்பிரிக்க வீரர் ரஸ்ஸி வேன் டெர் டுசன் கூறியுள்ளார். ...
-
இந்த மூன்று அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் - ஜாக் காலிஸ் கணிப்பு!
இம்முறை இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் தென்ஆப்பிரிக்காவும் மோத அதிக வாய்ப்பு உள்ளது என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்தின் சிக்சர் சாதனையை தகர்த்தது தென் ஆப்பிரிக்கா!
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற இங்கிலாந்தின் மாபெரும் சாதனையை தகர்த்த தென் ஆப்பிரிக்கா புதிய உலக சாதனை படைத்துள்ளது. ...
-
இந்தியாவை தோற்கடிப்பது தென் ஆபிரிக்காவுக்கு கூடுதல் பலமாக இருக்கும் - கிரேம் ஸ்மித்!
ஐடன் மார்க்ரம், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர் போன்ற அதிரடியாக விளையாடும் வீரர்களால் மற்ற அணிகளை காட்டிலும் இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிடம் சரவெடியாக அடித்து நொறுக்கும் மிடில் ஆர்டர் இருப்பதாக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
அணிக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுப்பவர்களே உண்மையான நம்பர் ஒன் வீரர் ஆவார் - கௌதம் கம்பீர்!
இந்த உலகக் கோப்பையில் பாபர் அசாம் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு எந்த இன்னிங்சிலும் விளையாடவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
சேஸிங் எங்களுக்கு எப்போதும் அழுத்தம் மிகுந்ததாக இருக்கிறது - டெம்பா பவுமா!
நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் சரியாக உள்ளது. ஆனால், சேஸிங்கில் எங்களிடம் அதே போன்ற திட்டம் இருக்கிறதா? என்று கேட்டால் என்னால் உறுதியாக கூற முடியாது என தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ...
-
வெற்றியை நாங்கள் நெருங்கியும் அதை ஃபினிஷிங் செய்யவில்லை - பாபர் ஆசாம்!
கடைசி நேரத்தில் ஹாரிஸ் ராவுஃப் பந்தில் தப்ரைஸ் ஷம்சிக்கு எதிராக எல்பிடபுள்யூ முறையில் கேட்ட போது நடுவர் அவுட் கொடுத்திருந்தால் இதே த்ரில் வெற்றி தங்கள் பக்கம் வந்திருக்கும் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47