The test
IND vs NZ, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் 15 ரன்னிலும், வில் யங் 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திரான இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்தும் அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 76 ரன்களில் பெவிலியன் திரும்ப, ரச்சின் ரவீந்திராவும் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on The test
-
அதிகமுறை டக் அவுட்; சச்சினின் சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய டிம் சௌதீ - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
குறிப்பிட்ட லெந்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன் - வாஷிங்டன் சுந்தர்!
நான் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பந்துவீச கவனம் செலுத்தினேன், அங்கும் இங்கும் எனது வேகத்தை மாற்றினேன். அதற்கான பலனையும் பெற்றுள்ளேன் என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். ...
-
நாதன் லையனை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் நாதன் லையனை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
PAK vs ENG, 3rd Test: மீண்டும் அசத்திய சஜித் கான்; முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் தடுமாற்றம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், பாகிஸ்தான் அணியும் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs NZ, 2nd Test: வாஷிங்டன் சுழலில் சுருண்டது நியூசிலாந்து; இந்திய அணி தடுமாற்றம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs ENG, 3rd Test: சஜித், நோமன் அபாரம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs SA, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
IND vs NZ, 2nd Test: அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து நிதான ஆட்டம்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
BAN vs SA, 1st Test: சதத்தை தவறவிட்ட மெஹிதி ஹசன்; தென் ஆப்பிரிக்காவுக்கு 105 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 105 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பந்த்!
ஐசிசி ஆடவர் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரிஷப் பந்த் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
PAK vs ENG, 3rd Test: மாற்றமின்றி களமிறங்கும் பாகிஸ்தான் அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs SA, 1st Test: அணியை சரிவிலிருந்து மீட்ட மெஹிதி ஹசன்; முன்னிலை பெற்ற வன்கதேசம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 81 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
அணி நிர்வாகம் கேஎல் ராகுலுக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளது - கௌதம் கம்பீர்!
அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வீரர்கள் சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது நிபுணர்களின் கருத்து மூலமாகவோ தேர்ந்தெடுக்கப்படவில்லை என இந்திய அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24