Virat kohli
அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழந்த விராட், ரோஹித் - வைரலாகும் காணொளி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் டாஸ் நிகழ்வானது தாமதமானது. அதன்பின் தொடங்கிய போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படாத நிலையில், பாகிஸ்தான் அணியில் ஆசாம் கானிற்கு பதிலாக இமாத் வசிம் அணியில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். அதிலும் முதல் ஓவரை எதிர்கொண்ட அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அந்த ஓவரிலேயே அபாரமான சிக்ஸரை பறக்கவிட்டு அசத்தினார்.
Related Cricket News on Virat kohli
-
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சவால் நிறைந்தது - ரோஹித் சர்மா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எப்போதும் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
T20 WC 2024: விராட் கோலி, ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
விராட் கோலி அதிக ரன்கள் குவிக்கும் வீரராக இருப்பார் - ஸ்மித், யுவராஜ் சிங் கணிப்பு!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரராக விராட் கோலி இருப்பார் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கணித்துள்ளனர். ...
-
விராட் கோலியை தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் - மேத்யூ ஹைடன்!
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கி விளையாடவில்லை என்றால் அவரை அணியிலேயே சேர்க்க கூடாது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி விருதுகள் வெல்வதில் சாதனை படைத்த விராட் கோலி!
கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஐசிசி தனிநபர் விருதுகளை வென்ற முதல் வீரர் எனும் சாதனையை படைத்து இந்திய அணியின் நசத்திர வீரர் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை குவித்த இரண்டாவது பேட்டர் எனும் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் படைத்துள்ளார். ...
-
எங்கள் உறவை நாடு அறியத் தேவையில்லை - கௌதம் கம்பீர்!
விராட் கோலிக்கும் எனக்கும் உள்ள உறவை நாடு அறியத் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா பாபர் ஆசாம்?
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை படைக்க பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாமிற்கு 51 ரன்களை மட்டுமே தேவைப்படுகிறது. ...
-
ரோஹித் சர்மா நான்காம் வரிசையில் களமிறங்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா நான்காம் இடத்தில் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் - வில் ஜேக்ஸ்!
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய இங்கிலாந்து அணியின் இளம் வீரர் வில் ஜேக்ஸ், இந்திய அணி வீரர் விராட் கோலியிடமிருந்து விலைமதிப்பற்ற விஷயங்களைக் கற்றுக் கொண்தாக தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024 தொடரில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 வீரர்கள் பட்டியல்!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை!
நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
அடுத்த சீசனிலும் இதனை செய்ய விரும்புகிறேன் - விராட் கோலி!
இந்த சீசனுக்கான ஆரஞ்சு தொப்பியைப் பெற்றதில் மிகவும் பெருமையடைகிறேன் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை இரண்டு முறை வென்ற முதல் இந்திய வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24