When mayank
மகாராஜா கோப்பை 2024: குல்பர்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு!
கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் மூலம் நடத்தப்படும் மகாராஜா கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் - குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய குல்பர்கா அணியில் லுவ்னித் சிசோடியா ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான தொடக்கத்தைக் கொடுத்தார்.
அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் தேவ்தத் படிக்கல் 13 ரன்களிலும், ஷரத் 6 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லுவ்னித் சிசோடியா 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் பிரவீன் தூபே 26 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 19.5 ஓவர்கள் முடிவில் குல்பர்கா அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on When mayank
-
ஒரே போட்டியில் மூன்று சூப்பர் ஓவர்கள்; வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் ஹூப்லி அணி வெற்றி!
மஹாராஜா கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூரு பிளாஸ்டர்ஸ் மற்றும் ஹூப்லி டைகர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் முடிவை எட்ட மூன்று சூப்பர் ஓவர்கள் பயன்படுத்தப்பட்டது. ...
-
இந்த சீசனில் மயங்க் யாதவ் இனி விளையாடமாட்டார் - ஜஸ்டின் லங்கர்!
காயம் காரணமாக அவதிப்பட்டுவரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், இந்த சீசனில் இனி விளையாடமாட்டார் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் மயங்க் யாதவ்?
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்த லக்னோ அணி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மயங்க் யாதவ் தனது உடற்தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார் - மோர்னே மோர்கல்!
மயங்க் யாதவைப் தனது அனைத்து உடற்தகுதி சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். ...
-
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா மயங்க் யாதவ்? - ஸ்ரீதரன் ஸ்ரீரம் பதில்!
நாளைய போட்டிக்கு முன்னதாக மயங்க் யாதவிற்கு இறுதி சோதனையை நடத்துவோம், அதன் பிறகு மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக அவர் பங்கேற்பது குறித்து நாங்கள் அறிவிப்போம் என்று லக்னோ அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். ...
-
வலைபயிற்சியில் மயங்க் யாதவ்; லக்னோ அணி ரசிகர்கள் கொண்டாட்டம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிஎஸ்கேவுக்கு எதிராக மயங்க் யாதவ் விளையாடுவார் - ஜஸ்டின் லாங்கர்!
காயத்தால் அவதிப்பட்டு வரும் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டிங் லங்கர் தெரிவித்துள்ளார். ...
-
மயங்க் யாதவின் உடல்நிலை குறித்து அப்டேட் வழங்கிய எல்எஸ்ஜி சிஇஓ!
நேற்றைய போட்டியின் போது மயங்க் யாதவ் அடிவயிற்றுப் பகுதியில் வலியை உணர்ந்தாதன் காரணமாகவே போட்டியிலிருந்து பாதியில் விலகினார் என லக்னோ அணியின் சிஇஓ வினோத் பிஷ்த் தெரிவித்துள்ளார். ...
-
மயங்க் யாதவின் காயம் குறித்து அப்டேட் கொடுத்த குர்னால் பாண்டியா!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய மயங்க் யாதவ் குறித்த அப்டேட்டை சக அணி வீரர் குர்னால் பாண்டியா வழங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: காயத்தால் அவதிப்படும் மொஹ்சின் கான்; லக்னோ அணிக்கு பின்னடைவு!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ள நிலையில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹ்சின் கான் இப்போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மயங்க் யாதவின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது - கேஎல் ராகுல்!
மயங்க் யாதவ் பந்துவீசுவதை ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து பார்க்கும்போது அற்புதமாக இருந்தது என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
மயங்க் யாதவின் பந்துவீச்சு திறன் ஈர்க்க வைக்கிறது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
மயங்க் யாதவின் லெந்த் மற்றும் துல்லியமான பந்துவீச்சு திறமை ஈர்க்க வைக்கிறது என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மீண்டும் வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவ்; ஆர்சிபியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆஸி வீரர்களை வேகத்தால் அலறவிட்ட மயங்க் யாதவ்; வைரலாகும் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் மயங்க் யாதவ் அபாரமாக பந்துவீசி கேமரூன் க்ரீன் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24