david bedingham
BAN vs SA, 2nd Test: இரட்டை சதத்தை தவறவிட்டார் ஸோர்ஸி; தென் ஆப்பிரிக்க அணி அபார ஆட்டம்!
வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (அக்டோபர் 29) சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்கம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீசு அழைத்தார். மேலும் இப்போட்டிக்கான இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இரு அணி கேப்டன்களும் அறிவித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம் - டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 2 பவுண்டரிகளுடன் 33 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Related Cricket News on david bedingham
-
NZ vs SA, 2nd Test: முதல் சதத்தைப் பதிவுசெய்த பெட்டிங்ஹாம்; நியூசிலாந்துக்கு 267 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 267 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிவரும் நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்களை எடுத்துள்ளது. ...
-
விராட் கோலியின் டெக்னிக்கை காப்பி அடித்தேன் - டேவிட் பெட்டிங்ஹாம்!
தடுமாற்றமான சமயங்களில் விராட் கோலியின் டெக்னிக்கை காப்பி அடிப்பேன் என்று தென் ஆப்பிரிக்க அணியின் அறிமுக வீரர் டேவிட் பெட்டிங்ஹாம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ...
-
NZ vs SA: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு கேப்டன் பொறுப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீரர் நீல் பிராண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24