As indian
ரோஹித் சர்மாவை தேடி வரும் டி20 கேப்டன்ஷிப்; பிசிசிஐ தீவிர முயற்சி!
இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் இந்திய டி20 அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே, ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால், அடுத்த டி20 உலகக்கோப்பை தொடர் வரை ரோஹித் சர்மாவே கேப்டனாக செயல்பட வேண்டும் என பிசிசிஐ விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், 2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியுடன் இந்திய அணி வெளியேறிய பின்னர், சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடப் போவதில்லை என ரோகித் சர்மா அறிவித்திருந்தார்.
Related Cricket News on As indian
-
பும்ரா இடத்தில் நான் இருந்தாலும் எனக்கும் வலிக்கும் - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!
பும்ராவின் மனநிலையை நீங்கள் பொறாமை, தலைக்கனம் என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். பும்ராவின் நிலையில் யார் இருந்தாலும், ஏன் நானாக இருந்தாலும் எனக்கும் வலிக்கும் என முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
தோனி இன்னும் 3 ஐபிஎல் சீசன்களை கூட விளையாடுவார் - ஏபிடி விலலியர்ஸ்!
தோனியின் பெயர் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் பார்த்த போது, மகிழ்ச்சியாக இருந்தது என தென் ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி சாதிப்பதற்கு நிறைய உள்ளன - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!
தம்முடைய உலக சாதனைகளை தகர்த்த விராட் கோலியிடம் இன்னும் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு நிறைய திறமைகள் இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஆர்சிபி அணி எப்போதும் இத்துறையில் பலவீனமாகவே உள்ளது - ஏபிடி வில்லியர்ஸ்!
அந்த காலம் முதல் இந்த காலம் வரை சுமாரான பவுலிங் தான் பெங்களூரு அணியின் பலவீனமாக இருந்து வருவதாக ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
கில்லிற்கு கேப்டன் பதவி வழங்கியது சரியான முடிவாக தோன்றவில்லை - ஏபிடி வில்லியர்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் கேன் வில்லியம்சன் பெயரை பார்த்ததும், அடுத்து அவரை தான் கேப்டனாக கொண்டு வருவார்கள் என்று நான் நினைத்தேன் என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார். ...
-
பொய்யான செய்தியில் என்னுடைய பெயரை சேர்க்காதீர்கள் - அஸ்வின் காட்டம்!
சென்னையின் அடுத்த கேப்டனாக கேரளாவை சேர்ந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இருப்பார் என்று தாம் சொன்னதாக வைரலான செய்தி பொய்யானது என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
-
ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்டது நல்லது - கௌதம் கம்பீர்!
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் எதிர்வரும் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும் என நம்பிக்கை இருக்கிறது என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
கேப்டனாக செயல்படும்போது அணிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் - ஷுப்மன் கில்!
ஒரு அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படும் போது பல்வேறு பொறுப்புகள் கூடுதலாக நமக்கு வந்துவிடும் என்று குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிர்சியாளராக தொடரும் ராகுல் டிராவிட் - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்திய ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் ராகுல் டிராவிட் தொடர்வார் என பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியி உதறிய ஆஷிஷ் நெஹ்ரா!
இந்திய அணியின் டி20 பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க பிசிசிஐ தம்மை அணுகிய பிசிசிஐயின் வாய்ப்பை முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகும் விராட் கோலி!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புவதாக பிசிசிஐ-க்கு விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ராகுல் டிராவிட்டின் பதவிக்காலத்தை நீட்டிக்க பிசிசிஐ முடிவு - தகவல்!
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருடைய பயிற்சியாளர் பொறுப்பை நீட்டிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் தோல்விக்கு இதுவே காரணம் - வாசிம் அக்ரம்!
இறுதிப்போட்டிக்கு முன்பே இந்தியாவை சாம்பியன் அணியாக கொண்டாடிய ரசிகர்கள் மற்றும் இந்திய ஊடகங்கள் தான் இந்த தோல்விக்கு காரணம் என்று வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24