Asia cup
ஆசிய கோப்பை தொடரில் விளையாட நேபாள அணி தகுதி!
காத்மண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஆல் அவுட்டானது.
இதையடுத்து களமிறங்கிய நேபாள அணியில், 17 வயதான குல்ஷன் ஜா 84 பந்துகளில் குவித்த 67 ரன்கள் நேபாள அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதன்மூலம் நேபாள கிரிக்கெட் அணி, செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பை போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது, மேலும் அந்த அணி குரூப் ஏ வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
Related Cricket News on Asia cup
-
ஆசிய கோப்பையை தவிர்க்கும் இந்தியா?
ஆசியக் கோப்பை தொடர் நடக்க இருக்கும் காலகட்டத்தில் பிசிசிஐ ஐந்து நாடுகளை வைத்து புதிதாக ஒரு தொடரை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ...
-
ஆசிய கோப்பையை ஹைப்ரிட் மாடலில் நடத்த முன்மொழிவை வழங்கியுள்ளோம் - நஜாம் சேதி!
ஆசிய கோப்பையில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு மற்ற போட்டிகளை பாகிஸ்தானில் தான் நடத்துவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தானிடையே நீடிக்கும் இழுபறி!
ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்தவும் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ...
-
ஆசிய கோப்பை 2023: பிரதமரிடம் கோரிக்கை விடுத்த ஷாஹித் அஃப்ரிடி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தானுக்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் ஷாஹித் அஃப்ரிடி கோரிக்கை விடுத்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: இந்திய அணி போட்டிகளில் துபாயில் நடத்த திட்டம்!
ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கான போட்டிகளை துபாயில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாகிஸ்தானின் உலகக்கோப்பை நிலைபாடு குறித்து அஸ்வின் கருத்து!
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்காது என இந்திய வீரர் அஷ்வின் கூறியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: மார்ச் மாதத்தில் முக்கிய அறிவிப்பு!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், மீண்டும் மார்ச் மாதம் நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் ஆசிய கோப்பை எங்கு நடக்கும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம்; பஹ்ரைன் புறப்பட்ட ஜெய் ஷா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்காது என்ற நிலைப்பாட்டில் பிசிசிஐ உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பதிலடி கொடுத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில்!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா மீதான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதியின் குற்றச்சாட்டுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: ஒரே குரூப்பில் இடம்பிடித்த இந்தியா - பாகிஸ்தான்!
வரவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கோலி, ராகுல் பாகிஸ்தானில் விளையாடுவதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர் - ரமீஸ் ராஜா!
நீண்ட நாள்களுக்குப் பின் தங்கள் நாட்டில் ஆசிய கோப்பை போன்ற பலதரப்பு தொடர் நடைபெறுவதை பிசிசிஐ தடுக்க முயற்சித்த காரணத்தாலேயே இந்தியாவை அவ்வாறு விமர்சித்ததாக ரமீஸ் ராஜா கூறியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானின் நடைபெறவில்லை என்றால் இது நடக்கும் - ரமீஸ் ராஜா எச்சரிக்கை!
எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவில்லை என்றால் நாங்கள் தொடரில் இருந்து வெளியேற வாய்ப்புகள் அதிகம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவின் பேச்சை கேட்டு பாகிஸ்தான் நடக்க வேண்டும்; அட்வைஸ் வழங்கிய டேனீஷ் கனேரியா!
இந்தியா சொல்வதை கேட்டு நடக்கும்படி பாகிஸ்தான் வாரியத்திற்கு அந்நாட்டின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா அறிவுரை கூறியுள்ளார். ...
-
யாரின் பேச்சையும் கேட்டு நடக்க வேண்டிய இடத்தில் இந்தியா இல்லை - அனுராக் தாக்கூர்!
டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47