Caribbean premier league: Cricket News & Match Updates
சிபிஎல் 2024: கார்ன்வால் அபார பந்துவீச்சு; பேட்ரியாட்ஸை வீழ்த்தியது ராயல்ஸ்!
12ஆவது சீசன் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, அதன்படி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எவின் லூயிஸ் 6 ரன்னிலும், கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், ரைலீ ரூஸோவ் 9 ரன்களிலும், மைக்கைல் லூயிஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதற்கிடையில் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்த ஆண்ட்ரே ஃபிளெட்சரும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ஜோஷுவா டா சில்வா 25 ரன்களையும், ஆன்ரிச் நோர்ட்ஜே 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் ரக்கீம் கார்ன்வாலின் சுழலை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் பேட்ரியாட்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Caribbean premier league - Tesst
Chris Jordan Returns To TKR As CPL 2024 Home Leg Begins On Wednesday
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த ரோஸ்டன் சேஸ் - வைரலாகும் காணொளி!
சிபிஎல் 2024: ஃபால்கன்ஸை வீழ்த்தி செயின்ட் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ஷிம்ரான் ஹெட்மையர் - காணொளி!
சிபிஎல் 2024: சதமடித்து மிரட்டிய டி காக்; கயானாவை வீழ்த்தியது பார்படாஸ்!
6,0,4,4,6: அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய குயின்டன் டி காக்; வைரலாகும் காணொளி!
பவுண்டரி எல்லையில் அசாத்தலான கேட்சை பிடித்த ரோவ்மன் - ஹோல்டர் கூட்டணி; வைரலாகும் காணொளி!
சிபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ராயல்ஸ் வீழ்த்தி நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
சிபிஎல் 2024: பார்படாஸ் ராயல்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
புவனேஷ்வர் குமாரின் மெய்டன் சாதனையை உடைத்த முகமது அமீர்!
அபாரமான கேட்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த சாத்ராக் டெஸ்கார்ட் - காணொளி!
சிபிஎல் 2024: சார்லஸ், டூ பிளெசிஸ் அதிரடியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
Ireland Drop Balbirnie For T2OIs As New Faces Emerge Ahead Of SA Series
சிபிஎல் 2024: மழையால் பாதித்த ஆட்டம்; ஃபால்கன்ஸை டிஎல்எஸ் முறையில் வீழ்த்தியது ராயல்ஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47