Cl trophy
ரஞ்சி கோப்பை 2024-25: சண்டிகரை 204 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் எதிர்வரும் நேற்று (ஜனவரி 23)முதல் தொடங்கியது. இதில் எலைட் குரூப் டி பிரிக்காவுக்கான லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு முகமது அலி மற்றும் ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். முகமது அலி 40 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 63 ரன்கள் எடுத்த நிலையில் ஜெகதீசனும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால், விஜய் சங்கர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பாபா இந்திரஜித்தும் 49 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினைத் தவறவிட்டார்.
Related Cricket News on Cl trophy
-
ரஞ்சி கோப்பை 2024-25: ஆண்ட்ரே சித்தார்த் சதம்; 301 ரன்களில் ஆல் அவுட்டானது தமிழ்நாடு!
சண்டிகர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 301 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த ரோஹித், கில், ஜெய்ஸ்வால், பந்த்!
மோசமான ஃபார்மில் தொடர்ந்து போராடி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர், ரஞ்சி கோப்பை போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். ...
-
CT2025: கோப்பையை மீண்டும் கைப்பற்ற ஒவ்வொரு வீரரும் உறுதியுடன் உள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தங்கள் அணி வீரர்கள் தனித்துவமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி கோப்பையை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வர உறுதிபூண்டுள்ளதாக இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
CT2025: தொடக்க நிகழ்ச்சியை துபாய்க்கு மாற்ற பிசிசிஐ கோரிக்கை!
சாம்பியன்ஸ் கோப்பை தொடக்க நிகழ்ச்சியை பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
நான் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை - சூர்யகுமார் யாதவ்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது எனக்கு ஏன் வருத்தமளிக்க வேண்டும் என்று இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து மனம் திறந்த கருண் நாயர்!
இந்தியாக்கா விளையாட வேண்டும் என்ற பசி தன்னை சிறப்பாக செயல்பட தூண்டியதாக விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட கருண் நாயர் தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: ரயில்வேஸுக்கு எதிரான போட்டியில் விளையாடும் விராட் கோலி!
ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: ரஹானே தலைமையில் விளையாடும் ரோஹித் சர்மா!
அஜிங்கியா ரஹானே தலைமையிலான 17 பேர் அடங்கிய மும்பை ரஞ்சி கோப்பை அணியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடவுள்ளனர். ...
-
ஷுப்மன் கில்லுக்கு துணைகேப்டன் பொறுப்பு; அதிருப்தியை வெளிப்படுத்திய ஹர்பஜன் சிங்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
CT2025: அணியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம்; வெளியே வந்த முக்கிய தகவல்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு முன்பு, கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே நடந்த உரையாடல் குறித்த தகவல்கள் தற்சமயம் வெளியாகியுள்ளன. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: டெல்லி அணிக்காக அடுத்த போட்டியில் விளையாடும் ரிஷப் பந்த்!
சௌராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடும் டெல்லி அணியில் ரிஷப் பந்த் இடம்பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
CT2025: முகமது சிராஜை தேர்வு செய்யாதது குறித்து விளக்கமளித்த ரோஹித் சர்மா!
புதிய பந்தையும் பழைய பந்தையும் கொண்டு பந்து வீசக்கூடிய ஒருவரை தேர்வுசெய்ய நாங்கள் விரும்பினோம். அதனால்தான், அர்ஷ்தீப் சிங்கிறு நாங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். ...
-
VHT2025: ருதுராஜ் கெய்க்வாட் சாதனையை சமன்செய்த துருவ் ஷோரே!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ச்சியாக சதங்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை விதர்பா அணியின் துருவ் ஷோரே படைத்துள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: விதர்பாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கர்நாடகா!
விஜய் ஹசாரே கோப்பை 2025: விதர்பா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கர்நாடகா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24