Icc odi
நாங்கள் தவறுகளை செய்து தோல்வியை சந்தித்துள்ளோம் - ஜோஸ் பட்லர்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29ஆவது லீக் போட்டியில் இன்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பலபரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை மட்டுமே குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோஹித் சர்மா 87 ரன்களையும், கே.எல் ராகுல் 39 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 49 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது எளிதில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே குவித்தது.
Related Cricket News on Icc odi
-
பேட்டிங்கில் நாங்கள் அசத்தவில்லை - ரோஹித் சர்மா அதிருப்தி!
எங்களுடைய பவுலிங் நல்ல சமநிலையுடன் இருக்கிறது. இருப்பினும் பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
ஸ்தம்பித்து நின்ற ஸ்டோக்ஸ்; ஸ்டம்ப்ஸை தகர்த்த முகமது ஷமி - வைரல் காணொளி!
முகமது ஷமி மற்றும் பும்ராவின் தரமான பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: முகமது ஷமி அபாரம்; இங்கிலாந்தை வழியனுப்பியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் 87 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியாவை 229 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மீண்டும் ஷார்ட் பந்தில் விக்கெட்டை இழந்த ஸ்ரேயாஸ்; ரசிகர்கள் காட்டம்!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஷார்ட் பந்தில் விக்கெட்டை இழந்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
உலகக்கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டான விராட் கோலி; வைரல் காணொளி!
கடந்த 2011 முதல் விளையாடி வரும் இந்திய வீரர் விராட் கோலி தம்முடைய கேரியரில் உலகக் கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டாகி ஏமாற்றமளித்துள்ளார். ...
-
அரையிறுதிக்கான வாய்ப்பை பெறும் நோக்கில் விளையாடி வருகிறோம் - பால் வான் மீகெரன்!
ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக தனியாக நாங்கள் 20 நிமிடங்கள் பீல்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். அதுதான் போட்டியின் போதும் எங்களை சிறப்பாக செயல்பட வைக்கிறது என ஆட்டநாயகன் விருதை வென்ற பால் வான் மீகெரன் தெரிவித்துள்ளார். ...
-
ஜோ ரூட் விளையாடும் அந்த ஷாட்டை விளையாட விரும்புகிறேன் - விராட் கோலி!
ஜோ ரூட் ஒட்டுமொத்தமாக சிறந்தவர். அவர் ரிவர்ஸ் ஸ்லாப் விளையாடும் விதம் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. நான் அவர் விளையாடும் அந்த ஷாட்டை விளையாட விரும்புகிறேன் என இந்திய வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
நாக் அவுட் போட்டிகளை பற்றி இப்போது கவலைப்படவே வேண்டாம் - சுனில் கவாஸ்கர்!
இன்று இங்கிலாந்துக்கு எதிராக விளையாட இருக்கும் இந்திய அணிக்கு இந்திய முன்னாள் மற்றும் லெஜெண்ட் வீரர் சுனில் கவாஸ்கர் மிக முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி இருக்கிறார். ...
-
இந்த மூவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டும் - பாபர் ஆசாம்!
விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் கேன் வில்லியம்சன் மூன்று பேரும் எனக்கு பிடித்த பேட்ஸ்மேன் என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையில் முதல் முறை; விக்கெட் இன்றி இன்னிங்ஸை முடித்த ஸ்டார்க்!
உலகக் கோப்பைகளில் தொடர்ச்சியாக குறைந்தது ஒரு விக்கெட்டை எடுத்த வீரர் என்ற மிட்செல் ஸ்டார்கின் தனித்துவமான உலக சாதனை இப்போட்டியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. ...
-
நாங்கள் அரையிறுதிக்கு செல்வதே லட்சியம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
இத்தொடரின் தொடக்கத்திலேயே நாங்கள் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடுவோம் என பேசினோம். இப்போதும் அதுவே எங்களுடைய இலக்காக இருக்கிறது என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
தொடர் முழுவதுமே நாங்கள் மோசமான செயல்பாட்டினை வெளிப்படுத்தி உள்ளோம் - ஷாகிப் அல் ஹசன்!
இந்த தொடர் முழுவதுமே நாங்கள் பெரிய அளவில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறோம். தற்போதைக்கு எங்களது மனதில் உள்ள எண்ண ஓட்டங்கள் குறித்து சரியாக சொல்ல முடியவில்லை என வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24