In indian
தினேஷ் கார்த்திகிடம் ஆலோசனை கேட்கும் ரிஷப் பந்த் - வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள 2022 டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் வலை பயிற்சிகளில் ஈடுபட்டு பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனைக் இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் டி20 அணியாக சாதனை படைத்து இத்தொடரில் களமிறங்கும் இந்தியாவுக்கு சமீபத்திய ஆசிய கோப்பை தோல்வியும் கடைசி நேரத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதும் பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.
இருப்பினும் குறைகளை சரி செய்துகொண்டு ஆஸ்திரேலியாவில் வெற்றி வாகை சூடுவதற்காக இந்திய அணியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை தன்னுடைய முதல் போட்டியில் இந்தியா சந்திக்கிறது. அதில் விளையாடும் 11 பேர் அணியை உறுதி செய்து விட்டதாக ஏற்கனவே கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்துள்ள நிலையில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு முதன்மை விக்கெட் கீப்பராக தன்னை அடையாளப்படுத்தியுள்ள இளம் வீரர் ரிஷப் பந்த் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் இதுவரை பெற்ற 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பில் ஒருமுறை கூட அனைவரது மனதிலும் நிற்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.
Related Cricket News on In indian
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் இணைந்தார் சிராஜ்!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் காத்திருப்பு வீரராக சேர்க்கப்பட்டுள்ள முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் இணைந்தார். ...
-
ரோஹித் சர்மாவை கவர்ந்த பதினோறு வயது சிறுவன்!
டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணி பயிற்சி செய்யும் போது ஒரு சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. ...
-
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகிறார் சௌரவ் கங்குலி!
பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி போட்டியின்றி தேர்வுசெய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அதிக ஃபிட்னஸுடன் இருந்த ஒரே வீரர் இவர் தான் - பிசிசிஐ!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு சுவாரஸ்யமான தகவலில் கடந்த 2021-22 சீசனில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று சிகிச்சை பெறாத ஒரே வீரர் விராட் கோலி தான் என்று தெரிவித்துள்ளது. ...
-
உலகக்கோப்பையை வெல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை - தீப்தி சர்மா!
வங்கதேசத்தில் நடைபெற்று முடிந்த மகளிர் ஆசிய கோப்பை தொடரின் சிறந்த வீராங்கனை விருது இந்தியாவின் தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்த சுரேஷ் ரெய்னா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால், சாம்பியன் பட்டத்தை வெல்வது கூட இந்திய அணிக்கு இலகுவாகிவிடும் என முன்னாள் இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பலம்; பலவீனம் ஓர் பார்வை!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் இருக்கும் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
இணையத்தில் டிரெண்ட் ஆகும் #ArrestKohli; தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
அரியலூரில் விராட் கோலி ரசிகருக்கும் ரோஹித் சர்மா ரசிகருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ...
-
கடைசி நேரத்தில் முடிவெடிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை - ரோஹித் சர்மா!
டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அணியை ஏற்கனவே தேர்வு செய்து விட்டேன் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்தின் பங்களிப்பு மிகவும் முக்கியம் - சுரேஷ் ரெய்னா!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் முக்கிய பங்கு வகிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பும்ராவுக்கு மாற்றாக ஷமி; சிராஜ், ஷர்தூலுக்கு வாய்ப்பு!
டி20 உலக கோப்பையிலிருந்து காயத்தால் விலகிய ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மாற்று வீரராக முகமது ஷமி இந்திய அணியில் அறிவிக்கப்பட்டுள்ளார். ...
-
பயிற்சி ஆட்டம்: மேற்கு ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி!
மேற்கு ஆஸ்திரேலியா அணியுடனான 2ஆவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அரையிறுதி செல்ல இதனை செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
உலக கோப்பை அணியில் சஞ்சு சாம்சன் இருக்கலாம் - வாசிம் ஜாஃபர்!
ஆரம்ப காலங்களில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறிய சஞ்சு சாம்சன் தற்போது அதில் முன்னேறியுள்ளதால் ஒருநாள் உலக கோப்பையில் விளையாடும் தகுதியை எட்டியுள்ளதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24