In ranji trophy
ரஞ்சி கோப்பை 2024: ரயில்வேஸை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு!
இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ரஞ்சி கோப்பை தொடர். இத்தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் 5ஆவது சுற்று ஆட்டத்தில் எலைட் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் ரயில்வேஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ரயில்வேஸ் அணியில் கேப்டன் பிரதாம் சிங் ஒரு ரன்னிலும், விவேக் சிங் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய சுராஜ் அவுஜா 52, சைஃப் 6, மெராய் 53 ரன்களைச் சேர்க்க ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்ஸில் 229 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on In ranji trophy
-
ரஞ்சி கோப்பை தொடரில் வரலாறு படைத்த அன்ஷுல் கம்போஜ்!
கேரள அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் ஹரியானா அணி வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: கம்பேக் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி - வைரலாகும் காணொளி!
காயம் காரணமாக கடந்த ஓராண்டாக கிரிக்கெட் விளையாடமால் இருந்த முகமது ஷமி, மத்திய பிரதேச அணிக்கு எதிரான தனது கம்பேக் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: பெங்கால் அணியில் இணைந்த முகமது ஷமி!
நாளை நடைபெறும் மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்கால் அணிக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விருத்திமான் சஹா!
நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் விருத்திமான் சஹா அறிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: சதமடித்து அசத்திய விஜய் சங்கர்; ஆட்டத்தை டிரா செய்தது தமிழ்நாடு!
சத்தீஸ்கர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வியைத் தவிர்த்து ஆட்டத்தை டிராவில் முடித்தது. ...
-
மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரித்வி ஷா!
மோசமான உடற்தகுதி காரணமாக மும்பை ரஞ்சி அணியில் இருந்து நட்சத்திர வீரர் பிரித்வி ஷா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ...
-
இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் - சஞ்சு சாம்சன்!
என்னை வெறும் வெள்ளை-பந்து கிரிக்கெட்டுடன் மட்டுப்படுத்த விரும்பவில்லை. இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: சௌராஷ்டிராவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: இஷான் கிஷன் தலைமையிலான ஜார்கண்ட் அணி அறிவிப்பு!
எதிர்வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷான் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: முதலிரண்டு போட்டிகளில் இருந்து முகமது ஷமி விலகல்!
எதிர்வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்கால் அணிக்காக விளையாட இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரை காட்டிலும் உள்ளூர் போட்டிகள் முக்கியமானவை - தவால் குல்கர்னி!
ஐபிஎல் போட்டிகளைக் காட்டிலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது 100 சதவிகிதம் முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: விதர்பாவை வீழ்த்தி 42ஆவது முறையாக பட்டத்தை வென்றது மும்பை!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 42ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: அரைசதம் கடந்த கருண், அக்ஷய்; தோல்வியைத் தவிர்க்க போராடும் விதர்பா!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: முஷீர் கான் அபார சதம; விதர்பா அணிக்கு இமாலய இலக்கு!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணி 538 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24