Kuldeep yadav
T20 WC 2024, Semi Final 2: அக்ஸர், குல்தீப் சுழலில் வீழ்ந்த இங்கிலாந்து; 10-ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டி முன்னேறி இந்தியா சாதனை!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியானது ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தாமதமாக தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் விராட் கோலி சிக்ஸருடன் இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் 9 ரன்களில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்தும் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 40 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனையடுத்து ரோஹித் சர்மாவுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
Related Cricket News on Kuldeep yadav
-
T20 WC 2024, Super 8: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
T20 WC 2024, Super 8: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
குல்தீப் யாதவை இந்திய அணி பயன்படுத்த வேண்டும் - ஸ்டீபன் ஃபிளெமிங்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் அக்ஸர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ரிஷப் பந்த்!
பேட்டிங்கில் சரியாக செயல்படாததால் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு போதுமான ரன்களை கொடுக்கவில்லை என டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: குல்தீப் யாதவ் பேட்டிங்கால் தப்பிய டெல்லி; கேகேஆர் அணிக்கு 154 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: மீண்டும் சிக்ஸர் மழை பொழிந்த ஹைதராபாத் பேட்டர்கள்; டெல்லி அணிக்கு 267 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 267 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
நாங்கள் தற்போது சரியான லெவனில் பயணிக்கிறோம் - ரிஷப் பந்த்!
அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் போது ஒவ்வொரு முறையும் உங்களால் சரியான லெவனை தேர்வு செய்ய முடியாது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஜேக் ஃபிரெசர், ரிஷப் பந்த் அதிரடி; லக்னோவை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: ஆயூஷ் பதோனி அதிரடியால் தப்பிய லக்னோ; டெல்லி அணிக்கு 168 டார்கெட்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தனது முதல் ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிடும் மிட்செல் மார்ஷ்; உறுதிசெய்த சௌரவ் கங்குலி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக ஒருசில போட்டிகளை தவறவிடுவார் என அந்த அணியின் ஆலோசகர் சௌரவ் கங்குலி உறுதிசெய்துள்ளார். ...
-
காயத்தால் அவதிபடும் குல்தீப் யாதவ்; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பின்னடைவு!
காயம் காரணமாக ஓய்வில் இருந்துவரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் குல்தீப் யாதவ், மேலும் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒரு டெஸ்டில் வெற்றி பெற எல்லாம் சரியாக நடக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
நீங்கள் ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிபெற வேண்டுமென்றால், எல்லா விஷயங்களும் களத்தில் சரியாக நடக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG, 5th Test: அஸ்வின் அபார பந்துவீச்சு; இங்கிலாந்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24