Odi world
CWC Qualifiers Final 2023 : நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது!
2023 ஆம் ஆண்டின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்றது . பத்து அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றதோடு இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றன .
இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 23 ரன்களிலும், சமரவிக்ரமா 19 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - சஹான் ஆராச்சிகே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Odi world
-
ரோஹித் சர்மாவும் வெற்றிகரமான கேப்டனாக வருவார் - முகமது கைஃப் நம்பிக்கை!
சில அடிப்படை தவறுகளை சரி செய்தால் ரோஹித் சர்மாவும் இந்திய அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக வருவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
எந்த மைதானத்தில் நடந்தாலும், அந்த மைதானத்தில் சிறப்பாக விளையாட இருக்கிறோம் - பாபர் ஆசாம்!
எந்த கிரிக்கெட் மைதானத்திலும் விளையாடி எந்த அணியையும் தோற்கடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் கூறியுள்ளார். ...
-
இந்த அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - சவுரவ் கங்குலி!
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இந்த உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
2007-இல் தந்தை;2023-இல் மகன் - உலகக்கோப்பை தொடரில் கலக்கும் டி லீட் குடும்பம்!
நெதர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் பஸ் டி லீட் . இவரது தந்தையான டிம் டி லீட் நெதர்லாந்து அணிக்காக இதற்கு முன்பு விளையாடிய நான்கு உலகக்கோப்பை போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ...
-
ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் தமிம் இக்பால்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தமிம் இக்பால் நேற்று அறிவித்த நிலையில், இன்று (ஜூலை 7) தனது அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: தீக்ஷனா, நிஷங்கா அபாரம்; விண்டீஸை வீழ்த்தியது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை ஒரு ரன்னில் வீழ்த்தில் யுஏஇ த்ரில் வெற்றி!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஒன்றும் பெரிதானது கிடையாது - மிக்கி ஆர்த்தர்!
உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ற போட்டி ஒன்றும் பெரிதானது கிடையாது என்று பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: ஆல் ரவுண்டராக அசத்திய பாஸ் டி லீட்; கனவை நனவாக்கியது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிப்பெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: மிரட்டிய ஆசிஃப் கான்; 309 ரன்களை இலக்காக நிர்ணயித்தது யுஏஇ!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 309 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: மெக்முல்லன் அபார சதம்; நெதர்லாந்துக்கு 278 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 278 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: ஓமனை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டி வெறும் ஒரு ஆட்டம் தான் - ஷாஹீன் அஃப்ரிடி!
நாம் பாகிஸ்தான் - இந்தியா மோதும் போட்டி குறித்து சிந்திப்பதை விட்டு, அதில் கவனம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: நேபாளத்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24