Pakistan cricket
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் இமாம் உல் ஹக்!
வெஸ்ட் இண்டீஸ் அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்மூலம் 18 ஆண்டுகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் டெஸ் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இந்த தொடர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியிம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கிரேய்க் பிராத்வைட் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர் அமீர் ஜாங்குவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குடகேஷ் மோட்டியும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இருப்பினும் ஷமார் ஜோசப் மற்றும் அல்ஸாரி ஜோசப் உள்ளிட்டோர் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை.
Related Cricket News on Pakistan cricket
-
ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
காம்ரன் குலாமை க்ளீன் போல்டாக்கிய காகிசோ ரபாடா - காணொளி!
தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் பாகிஸ்தானின் காம்ரன் குலாமின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
பாபர் ஆசாமிடம் வம்பிழுத்த வியான் முல்டர்; வைரல் காணொளி!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாமிடம் தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் வியான் முல்டர் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரில் சாதனை படைத்த பாபர் ஆசாம்!
செனா நாடுகளில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் இன்ஸமாம் உல் ஹக்கின் சாதனையை பாபர் ஆசாம் முறியடித்துள்ளார். ...
-
2nd Test, Day 3: ஷான் மசூத், பாபர் ஆசாம் அசத்தல்; ஃபாலோ ஆனுக்கு பிறகு அதிரடி காட்டும் பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் ஆன நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் இறங்கியுள்ளது. ...
-
மேல் சிகிச்சைக்காக லண்டன் செல்லும் சைம் அயூப்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்த பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் மேல் சிகிச்சைக்காக லண்டன் செல்லவுள்ளதாக பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிடும் சைம் அயூப்; பாக்., ரசிகர்கள் அதிர்ச்சி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த பாகிஸ்தான் வீரர் சைம் அயூப், காயத்தில் இருந்து குணமடைய 6 வாரங்கள் தேவைப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
SA vs PAK: காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார் சைம் அயூப்!
ஃபீல்டிங்கின் போது காயமடைந்த பாகிஸ்தான் அணியின் சைம் அயூப், தனது காயம் தீவிரமடைந்ததை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இருந்து பாதியிலேயே விலகியுள்ளார். ...
-
காயமடைந்து பாதியிலேயே வெளியேறிய சைம் அயூப் - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சைம் அயூப் காயமடைந்து களத்தில் இருந்து வெளியேறிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - ஷான் மசூத்!
நாங்கள் பேட்டிங் செய்யும் போது கூடுதல் ரன்களை எடுத்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் ரன்களை சேர்க்க முடியவில்லை என பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித், கோலி சாதனையை சமன்செய்தார் பாபர் ஆசாம்!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது சாதனையை பாகிஸ்தானின் பாபர் ஆசாம் சமன்செய்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அறிவித்தது பிசிபி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
கிரிக்கெட் வாரியத்தை விட யாரும் பெரியவர்கள் இல்லை - ஃபகர் ஸமான்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும், பாபர் ஆசாமிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது குறித்து பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஸமான் மௌனம் கலைத்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் பாபர் ஆசாம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் ஆசாம் 3 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் மூன்று வடிவங்களிலும் 4000 ரன்களுக்கு மேல் எடுத்த உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24