R ashwin
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்த அஸ்வின்; ரஹானே முன்னேற்றம்!
ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைபட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் (903 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிஆட்டத்தில் முறையே 121, 34 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் (885 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 2ஆவது இடத்தையும், இதே டெஸ்டில் 163 ரன் குவித்து ஆட்டநாயகனாக ஜொலித்த ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (884 புள்ளி) 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதன் மூலம் டாப்-3 இடங்களை ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஒரே அணியை சேர்ந்த வீரர்கள் முதல் 3 இடங்களை பிடிப்பது என்பது அபூர்வமான நிகழ்வாகும். 39 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்த அரிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதற்கு முன்பு 1984ஆம் ஆண்டு வெஸ்ட்இண்டீஸ் அணியை சேர்ந்த கார்டன் கிரீனிட்ஜ், கிளைவ் லாய்ட், லாரி கோம்ஸ் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை வகித்துள்ளனர்.
Related Cricket News on R ashwin
-
டிஎன்பிஎல் 2023: திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி!
திருச்சி அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: சக்ரவர்த்தி, அஸ்வின் பந்துவீச்சில் 120 ரன்களுக்கு சுருண்டது திருச்சி!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
எந்த ஒரு இந்திய வீரரும் அஸ்வினை போல மோசமாக நடத்தப்பட்டதில்லை - சுனில் கவாஸ்கர்!
தற்போதைய காலத்தில் எந்த ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் அஸ்வினை போல மோசமாக நடத்தப்பட்டதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ...
-
WTC 2023: ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
அஷ்வின் இல்லாமல் போனதை என்னால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை - சச்சின் டெண்டுல்கர் விமர்சனம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆடும் லெவன் அணியில் இருந்து அஸ்வின் நீக்கப்பட்டதை இந்திய அணியின் முன்னணி வீரர் சச்சின் டெண்டுல்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
அஸ்வினை வெளியில் அமர்த்தி மிகப்பெரிய தவறை ரோஹித், டிராவிட் செய்துவிட்டனர் - ரிக்கி பாண்டிங்!
பிளேயிங் லெவனில் அஸ்வினை எடுக்காமல் மிகப்பெரிய தவறு செய்து விட்டீர்கள் என்று ரோஹித் சர்மா மற்றும் டிராவிட் இருவரின் முடிவுகளை ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் விமர்சித்திருக்கிறார். ...
-
WTC 2023: அஸ்வினுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது - டேனியல் வெட்டோரி!
இந்திய அணியின் டீம் காம்பினேஷன் என்கின்ற விஷயத்தில் அஸ்வினுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் அணியில் இடம் கிடைக்காது என்று டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நனையும் சாய் சுதர்சன்!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசிய சாய் சுதர்சன் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் பதிவிட்ட ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ...
-
WTC 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்தியா அணியின் பிளேயிங் லெவன் அணியை ரவி சாஸ்திரி அறிவித்து உள்ளார். ...
-
WTC 2023: இங்கிலாந்து புறப்படும் அஸ்வின், கோலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வான இந்திய வீரர்களில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், சிராஜ் உள்ளிட்ட ஒருசில நாளை இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளனர். ...
-
ஐபிஎல் 2023: தூபே போராட்டம் வீண்; மீண்டும் சிஎஸ்கேவை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ரஹானே, ராயுடுவை கட்டம் கட்டி தூக்கிய அஸ்வின்; வைரல் காணொளி!
சிஎஸ்கேவுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: லக்னோவை 154 ரன்களில் சுருட்டியது ராஜஸ்தான்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சாம்சன், ஹெட்மையர் அதிரடியில் குஜராத்தை வீழ்த்தியது ராஜஸ்தான்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24