R ashwin
அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமில்லை - ஏபிடி வில்லியர்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2ஆவது போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்து விளையாடி வருகிறது.
பொதுவாக கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களை ஆங்கிலத்தில் கோட் அதாவது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று ரசிகர்களும் வல்லுனர்களும் பாராட்டுவார்கள். அந்த வகையில் தம்மையும் நிறைய தருணங்களில் திணறடித்த திறமையை கொண்டுள்ள அஸ்வின் அவ்வாறு அழைப்பதற்கு தகுதியானவர் என்று தென் ஆபிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். ஆனாலும் அதற்கு 500 – 600 போன்ற இன்னும் சற்று அதிகமான விக்கெட்டுகளை எடுத்து சாதிக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் எப்போதுமே அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமில்லை என்றும் பாராட்டியுள்ளார்.
Related Cricket News on R ashwin
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10-இல் நுழைந்தார் ரோஹித்!
ஐசிசி ஆடவர் டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 10 ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
இளம் வீரர்களுக்கு சரியான ரோலை கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார். ...
-
அஸ்வினை எதிர்கொள்ளும் வீரர்கள் பயந்து நடுங்குகிறார்கள் - அனில் கும்ப்ளே!
அஸ்வினை எதிர்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயந்து நடுங்குகிறார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வினை பாராட்டிய பிரக்யான், சபா கரீம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே அஸ்வின் தனது திறமையை நிரூபித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா மற்றும் இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரீம் ஆகியோர் வெகுவாக பாராட்டியுள்ளனர். ...
-
ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கினை (707) பின்னுக்குத் தள்ளி 2ஆம் இடம் பிடித்து அஸ்வின் சாதனைப் படைத்துள்ளார். ...
-
இந்திய அணியின் வெற்றி குறித்து ரொஹித் சர்மா மகிழ்ச்சி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக கேப்டன் ரோகித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
WI vs IND, 1st Test: அஸ்வின் சுழலில் வீழ்ந்தது விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. ...
-
ஜெய்ஸ்வாலிடமிருந்து ஸ்பெஷலான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் இருந்து ஸ்பெஷலான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
தோல்விகளில் இருந்து தான் எனது தவறுகளை திருத்திக் கொள்கிறேன் - ரவிச்சந்திர அஸ்வின்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் என்ன செய்யலாம் என்று யோசித்து மனரீதியாக தயாராக இருந்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்த அஸ்வின்!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி டெஸ்ட் அரங்கில் தனது 33ஆவது ஐந்து விக்கெட்டுகளை பூர்த்தி செய்து ரவிச்சந்திரன் அஸ்வின் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
WI vs IND, 1st Test: அஸ்வின் அசத்தல்; யஷஸ்வி, ரோஹித் அதிரடி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் குவித்துள்ளது. ...
-
தந்தை, மகன் விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை!
2011ஆம் ஆண்டு தந்தை ஷிவ்நரைன் சந்தர்பால் விக்கெட்டை எடுத்த அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்டில் மகன் டெக்நரைன் சந்தர்பால் விக்கெட்டை எடுத்து புதிய சாதனைப் படைத்துள்ளார். ...
-
WI vs IND 1st Test: மாஸ் காட்டும் அஸ்வின்; தடுமாறும் விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
தோனிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறிய அஸ்வின்!
தோனிக்கு வாழ்த்து சொல்லாமல் போனால் கலவரமே நடந்துவிடும். ஆனால் இதுதான் என்னுடைய கடைசி பிறந்தநாள் வாழ்த்து போஸ்ட் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24