Tamil cricket news
ஐசிசி தலைவராகிறார் சௌரவ் கங்குலி?
இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவர் கடந்த 2000ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் இந்தியா சிக்கி தவித்த போது கேப்டனாக பொறுப்பேற்று வீரேந்தர் சேவாக், யுவ்ராஜ் சிங் உள்ளிட்ட தரமான இளம் வீரர்களை கண்டறிந்தார். மேலும் அவர்களுக்கு தேவையான வாய்ப்பை வழங்கி அடுத்த சில வருடங்களிலேயே ஆஸ்திரேலியா போன்ற தரமான அணிகளை வீழ்த்தும் உலகத்தரம் வாய்ந்த வெற்றிகரமான அணியாக மாற்றினார். அவரது தலைமையில் உலக கோப்பையை வெல்லவில்லை என்றாலும் வெளிநாடுகளில் வெற்றிகளை பெறும் யுக்தியை இந்தியா கற்றது.
சொல்லப்போனால் அவர் உருவாக்கிய வீரர்களை வைத்து தான் 2007 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் எம்எஸ் தோனி தலைமையில் இந்தியா அடுத்தடுத்த உலக கோப்பைகளை வென்றது. அப்படிப்பட்ட மகத்தான கேப்டன்களில் முக்கியமானவராக போற்றப்படும் அவர் கடந்த 2008இல் ஓய்வு பெற்று சில வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி மொத்தமாக விடைபெற்றார். அதன்பின் நேரடி கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனையாளராக செயல்பட்ட அவர் கடந்த 2019இல் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு போட்டியின்றி அனைவரின் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டார்.
Related Cricket News on Tamil cricket news
-
WI vs IND, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றவாது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
-
அடுத்தடுத்து ஐசிசி தொடர்களை நடத்தும் இந்தியா; கொண்டாட்டத்தில் பிசிசிஐ!
2026ஆம் ஆண்டு நடைபெறும் ஆடவர் டி20 உலகக்கோப்பை, 2029 சாம்பியன்ஸ் கோப்பை, 2031 ஆடவர் ஒருநாளுலகக்கோப்பை உள்ளிட்ட தொடர்களை நடத்துவதற்கான உரிமத்தை பிசிசிஐ கைப்பற்றியுள்ளது. ...
-
SL vs PAK, 2nd Test: டி சில்வா அபார சதம்; பாகிஸ்தானுக்கு 508 ரன்கள் டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 508 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs PAK, 2nd Test: பாகிஸ்தான் பந்துவீச்சில் திணறும் இலங்கை!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சஞ்சு சாம்சன் அற்புதமான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - டேனிஷ் கனேரியா!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா சஞ்சு சாம்சனின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவருக்கு இந்திய அணி நிறைய வாய்ப்புகளை வழங்கினால் இன்னும் மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். ...
-
SL vs PAK, 2nd Test: பந்துவீச்சில் அசத்தும் இலங்கை; தடுமாறும் பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
பயிற்சி எடுக்க போதிய நேரமில்லை - ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் ஜாஸ் பட்லர் பயிற்சி செய்ய நேரமில்லாததால் விரக்தியாக உள்ளதென தெரிவித்துள்ளார். ...
-
எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன் - அக்ஸர் படேல்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அதிரடியாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது குறித்த காரணத்தை அக்ஸர் படேல் கூறியுள்ளார். ...
-
நிச்சயமாக இந்த போட்டியில் தோற்றது வருத்தமாக தான் உள்ளது - நிக்கோலஸ் பூரன்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வியடைந்தது குறித்து நிக்கோலஸ் பூரன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
தலைமைப் பயிற்சியாளராக ஒரு உலகக் கோப்பை கூட வெல்லாதது ஏன்? - ரவி சாஸ்திரி பதில்!
இதுவரை ஒரு ஐசிசி உலகக் கோப்பை கூட வெல்லாத இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் என்ற கறை ரவி சாஸ்திரியின் மீது இருக்கும் நிலையில், அதுகுறித்து மனம்திறந்து பேசியுள்ளார் அவர். ...
-
WI vs IND, 3rd ODI: சாம்சன், ஐயர், அக்ஸரை பாராட்டி பேசிய ஷிகர் தவான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
நூறாவது போட்டியில் சதமடித்து மிரட்டிய ஷாய் ஹோப்!
தனது நூறாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷாய் ஹோப், 135 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 115 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தினார். ...
-
சத்தமில்லாமல் தோனி, அசாரூதின் சாதனைகளை முறியடித்த ஷிகர் தவான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 97 ரன்களை விளாசியதன் மூலம் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் சாதனைப் படைத்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை லீட்ஸில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24